தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இடிக்கப்படும் ஏழைகளின் வீடுகளும், மனித உரிமைகளும்: தீர்வு என்ன? - எஸ்.கவிவர்மன்

2 Sept 2026, 9:06 pm
இடிக்கப்படும் ஏழைகளின் வீடுகளும், மனித உரிமைகளும்: தீர்வு என்ன? - எஸ்.கவிவர்மன்

இடிக்கப்படும் ஏழைகளின் வீடுகளும், மனித உரிமைகளும்: தீர்வு என்ன? - எஸ்.கவிவர்மன்

பல தலைமுறைகளாகக் குடியிருந்து வந்த ஏழை மக்களின் வீடுகள், சுதந்திரமாதமான ஆகஸ்ட் 13 அன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியில் அரசு அதிகாரத்தின்அஸ்திரங்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், கைக்குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு, அத்தியாவசியப் பொருட்க ளுடன் நிர்க்கதியாகமக்கள் வெளியேறிய காட்சி, “இது சுதந்திர இந்தியாதானா?” என்ற கேள்வியை ஒவ்வொருவரின் மனதிலும்எழுப்பியது. வறுமையின் உச்சத்தில் வாழ்ந்த மக்களைத்தான் இன்று அரசு நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது.வீடிழந்த குடும்பங்கள் அன்று இரவு எங்கே சென்றார்கள்? கைக்குழந்தைகள் உணவு உண்டார்களா? முதியவர்கள்எங்கே உறங்கினார்கள்? மழை, வெயில், பாதுகாப்பு என அடுத்த நாள் வாழ்க்கையை அவர்கள் எப்படிஎதிர்கொள்வார்கள்? இந்தக் கேள்விகளுக்கு அதிகார வர்க்கத்திடம் எந்தப் பதிலும் இல்லை.

மாற்றுக்குடியிருப்பும் வாழ்வாதாரப் பாதுகாப்பும்

மக்களின் வீடுகளை இடிப்பதற்கு முன்பு, அவர்களின் மறுவாழ்வு குறித்து அரசு சிறிதும் சிந்திக்கவில்லை என்பதே நிஜம். மாற்றுக்குடியிருப்பு வழங்காமல்ஏழைக் குடும்பங்களை நிர்க்கதியாக்குவது எந்த விதத்தில் மனிதாபிமானமாகும்? பல தலைமுறைகளாக ஒரு இடத்தில் வாழ்ந்து வரும் மக்களை ஒரே நாளில் வெளியேற்றுவது என்பது வெறும் கட்டிடத்தை இடிப்பதுஅல்ல; அவர்களின் வாழ்வாதாரத்தையே இடித்துத் தள்ளுவதாகும். வீடு என்பது வெறும் நான்கு சுவர்கள் கொண்டகட்டிடம் அல்ல; ஒரு குடும்பத்தின் நினைவுகள், குழந்தைகளின் வளர்ப்பு, முதியவர்களின் வாழ்க்கை, உழைப்பின்வரலாறு என அனைத்தும் அதோடு இணைந்திருக்கின்றன. அகற்றுவதற்கான சட்டக் கட்டாயங்கள் இருந்தாலும்,அதற்கு முன்பாக மாற்றுக்குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட மனிதாபிமான ஏற்பாடுகளைச் செய்வதே நியாயமானநிர்வாகத்தின் முதன்மைக் கடமையாகும்.

அரசின் அங்கீகாரமும் முரண்பாடுகளும்

இந்த மக்களுக்குக் குடிநீர், சாலைகள், தெருவிளக்குகள், மின்சாரம், வீட்டுவரி, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை என அரசின் பல்வேறு துறைகள் மூலமாகவே அனைத்து அங்கீகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக இந்த வசதிகளுடன் வாழ்ந்த மக்களை, இன்றுதிடீரென ‘சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களாக’ மட்டும் பார்ப்பது எப்படி நியாயமாகும்? அரசின் பல்வேறுதுறைகள் அடிப்படை வசதிகளை வழங்கியிருக்கும்போது, அந்த மக்களின் குடியிருப்புப் பிரச்சனையில் அரசுக்கும்சம பங்கு பொறுப்பு உள்ளது. பயன்பாடற்று கைவிடப்பட்ட பல இடங்களில் மக்கள் குடியேறியுள்ளனர்; சில இடங்களில் அரசின்நிதியைக் கொண்டே வீடுகளும் கட்டப்பட்டுள் ளன. அரசின் திட்டங்கள் மூலம் வீடுகள் கட்டிக் கொடுத்த பின்னர், அதே வீடுகளை மற்றொரு அரசுத்துறை வந்து இடிப்பது என்பது நிர்வாக ஒருங்கிணைப்பின்படுதோல்வியைக் காட்டுகிறது. நீர்நிலைகளைப் பாதுகாப்பதும் மீட்பதும் எவ்வளவு அவசியமோ, அதே அளவிற்கு அங்கு பல ஆண்டுகளாகவாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதும் ஒரு மக்கள் நல அரசின் அத்தியாவசியப் பொறுப்பாகும்.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களும் அரசின் கடமையும்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பாக “இரட்டைப் பொறுப்பு” என்ற கொள்கையை மிகத் தெளிவாக வலியுறுத்தியுள்ளது. சட்டத்தை நிலைநாட்டும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, அதன் காரணமாகவீடற்றவர்களாக மாறும் ஏழைக் குடும்பங்களின் மறுவாழ்வையும், உரிய கால அவகாசத்தையும் அதிகாரிகள்உறுதி செய்ய வேண்டும் என்கிறது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வீடுகளை இடிப்பது குடிமக்களின்அடிப்படை வாழ்வுரிமையைப் பெரிதும் பாதிக்கிறது. புதிய இடத்திற்கு மாற்றப்படும் மக்களுக்கு குடியிருப்புஏற்பாடு மட்டுமல்லாமல், குடும்பச் செலவுகள் மற்றும் வாழ்வாதாரத்தைத் தொடர்வதற்கான ஆரம்பகாலநிதியுதவியும் வழங்கப்பட வேண்டும். கல்வியாண்டின் நடுவில் வீடுகள் இடிக்கப்படுவதால் குழந்தை களின் கல்விபாதிக்கப்படுகிறது; தொலைவான இடங்களுக்கு மாற்றப்படுவதால் அவர்களின் வேலைவாய்ப்பும் பறிபோகிறது.எனவே, நீர்நிலைகளை மீட்டெடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு விளிம்புநிலை மக்களுக்கு உரியமாற்று ஏற்பாடுகளைச் செய்து தருவதும் அரசின் தட்டிக்கழிக்க முடியாத கடமையாகும்.

அரசின் உடனடியான கொள்கை மாற்றமும் நிரந்தரத் தீர்வும்

இத்தகைய மனிதாபிமான அணுகுமுறை யின்றி, கண்ணை மூடிக்கொண்டு அதிகாரத்தைபயன்படுத்தும் போக்கு கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை நிலவுவது வேதனைக்குரியது. எனவே, நீதிபதிஅவமதிப்பு நடவடிக்கை வந்து விடுமோ என்ற அச்சத்தில் அதிகாரிகள் அவசரமாக மக்களை வெளியேற்றக் கூடாது. சட்டத்தின் ஆட்சி என்பது அதிகாரம் உள்ளவர் களைப் பாதுகாப்பதற்காகமட்டுமல்ல, அதிகார மற்றவர்களாக உள்ள எளிய மக்களைப் பாதுகாப்பதற்காகவும்தான். மதுரை மாட்டுத்தாவணி போன்ற இடங்களில் தரைவகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதைப்போல, 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து குடியிருந்து வரும் மக்களின் வசிப்பிடங்களை, தகுந்த ஆய்வின் அடிப்படையில்கைவிடப்பட்ட நீர்நிலை எனில் தரைவகை மாற்றம் செய்து பட்டா வழங்குவதற்காக அரசு சட்டமன்றத்தில் தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும். நீண்ட காலமாக மக்கள் குடியிருந்து வரும் பகுதிகளில், உண்மையானபயனாளிகளை அடையாளம் கண்டு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்;அதே நேரத்தில், அந்த நீர்நிலைகளின் ஓரங்களில் வாழ்ந்து வரும் ஏழை மக்களின் வாழ்க்கைக்கும் அரசுவழிசெய்ய வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.