முந்தய பக்கம்

அரசு தொடக்கப் பள்ளி கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது

27 May 2026, 9:16 pm
அரசு தொடக்கப் பள்ளி கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது
<p><strong>அரசு தொடக்கப் பள்ளி கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது</strong></p><p>​​​​​​​சிபிஎம் கண்டனம் புதுக்கோட்டை மே 27- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது அப்பகுதி யினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை அருகே புதுநகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கொண்ட கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடம் குழந்தை நேய பள்ளி உட் கட்டமைப்பு திட்டத்தின்கீழ் கடந்த 2022 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், புதன்கிழமை அந்த கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. பள்ளிக்கூடங்கள் திறப் பதற்கு ஒரு வாரமே உள்ள நிலையில், நடந்துள்ள இச்சம்பவம் அப்பகுதி யினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை பள்ளி திறந்த நாளில் இது நடந்திருந்தால் அசம்பா விதம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து மாரர்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜி. பன்னீர்செல்வம் கூறுகையில், நடந்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. மாவட்ட நிர்வாகமும் பள்ளிக் கல்வித்துறையும் உடனடியாக ஆய்வு செய்து, தரமற்ற முறையில் கட்டிடத்தை கட்டிய ஒப்பந்தகாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உட னடியாக கட்டிடத்தை சீர்செய்து மாண வர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரி வித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram