தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: நீதியும், நிவாரணமும் கிடைக்க வலியுறுத்தி சாலை மறியல்

19 May 2026, 10:23 pm
மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: நீதியும், நிவாரணமும் கிடைக்க வலியுறுத்தி சாலை மறியல்

மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: நீதியும், நிவாரணமும் கிடைக்க வலியுறுத்தி சாலை மறியல்

புதுக்கோட்டை, மே 19- வாய்பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருவதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த வாய்பேச முடியாத மற்றும் காதுகேளாத மாற்றுத் திறனாளி பெண் ஞாயிற்றுக்கிழமை மாலையில் இரண்டு நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

தற்போது, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜனநாயக மாதர் சங்கம், மாற்றுத் திறனாளிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கொடுத்த நெருக்கடியைத் தொடர்ந்து குற்றவாளிகளில் ஒருவர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மற்றொரு குற்றவாளியையும் உடனடியாக கைது செய்து இருவருக்கும் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

பெண்ணின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் மழையூரில் சாலை மறியல் நடைபெற்றது. இந்நிலையில், மற்றொரு குற்றவாளியும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து கறம்பக்குடி வட்டாட்சியர் பிரவீனா மேரி, மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பிருந்தா, மழையூர் காவல் ஆய்வாளர் கோபால் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதில், சிபிஐ ஒன்றியச் செயலாளர் சேசுராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் சி. அன்புமணவாளன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கி.ஜெயபாலன், ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். பாண்டிச்செல்வி, செயலாளர் பி. சுசிலா, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முருகானந்தம், புதிய சமத்துவ கட்சி சார்பில் சசிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையில், பாதிக்கப்பட்டவர் மாற்றுத் திறளானி என்பதால் மாற்றுத் திறளாளி ஆணையத்தின் மூலம் உரிய நிவாரணத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பது, பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அதிகபட்ச நிவாரணத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பது, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரருக்கு ஊரக வளர்ச்சித் துறையில் தற்காலிக அலுவலக உதவியாளர் பணி வழங்குவது, குற்றவாளிகள் இருவர் மீதும் தடுப்புக்காவல் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்வது எனவும், வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பிருந்தா உறுதியளித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.