தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுக்கோட்டை அருகே சாதி ஆணவப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்க!

9 May 2026, 12:26 am
புதுக்கோட்டை அருகே சாதி ஆணவப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்க!

புதுக்கோட்டை அருகே சாதி ஆணவப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்க!

புதுக்கோட்டை, மே 8 - புதுக்கோட்டை அருகே தலித் இளைஞர் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் வலியுறுத்தி உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா திருமலைராயபுரம் நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெ. ராஜ்குமார் - விஜயலட்சுமி தம்பதி யரின் மகன் ஹரிகரன்.

பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஹரிகரனும், அதே ஊரைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.

கொலை மிரட்டல் விடுத்த பெண்ணின் உறவினர்கள் பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவரையும் கண்டுபிடித்து கீரனூர் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்துள்ளனர்.

அங்கு பெண் ணைப் பிரித்து, அவரது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

அப்போதே பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கடுமையான வார்த்தை களைப் பயன்படுத்தி ஹரிகரனை பலி தீர்ப்ப தாக மிரட்டிச் சென்றுள்ளனர்.

அடுத்த சில மாதங்களில் பெண்ணுக்கு திருமண ஏற்பாட்டில் இறங்கிய அவர்கள், இதில் குறுக்கிட்டால், நடப்பதே வேறு என மீண்டும் ஹரிகரனை மிரட்டி உள்ளனர்.

கல்குவாரியில் பிணமாகக் கிடந்த தலித் இளைஞர் இந்நிலையில், கடந்த 21.04.2026 அன்று காலையில் ஹரிகரனைத் தொடர்பு கொண்ட இளம்பெண், பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் திருமணத்தில் உடன்பாடு இல்லை.

எனவே, தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து, ஏப்ரல் 21 மதி யம் வீட்டிலிருந்து வெளியே சென்ற ஹரிகரன், மாலையில் அதே பகுதி கல்குவாரியில் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனைக் கண்டு கதறிய ஹரிஹரனின் பெற்றோர், தங்களின் மகன் கொலை செய்யப் பட்டிருக்கலாம் கொலை செய்து இருக்க லாம் எனக்கூறி வெள்ளனூர் காவல் நிலையத் தில் புகார் அளித்தனர்.

ஹரிஹரன் தற்கொ லைக்கு தூண்டப்பட்டிருக்கலாம் என போலீ சார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எனினும், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் வலியுறுத்தியுள்ளன.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலைவர்கள் நேரில் ஆறுதல் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பின ரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத் தலைவருமான கே. சாமு வேல்ராஜ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர், முன்னணியின் மாவட்டத் தலைவர் சி. அன்பு மணவாளன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் துரை.

நாராயணன், ஒன்றியச் செயலாளர் எஸ். கலைச்செல்வன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். பெருமாள் ஆகியோர் பாதிக்கப்பட்ட ஹரிஹரன் குடும்பத் தினரை வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே. சாமுவேல்ராஜ், “பட்டியல் வகுப்பைச் சேர்ந்த இளைஞர் ஹரிகரன் கல்லூரியில் படிக் கும்போது வளாகத் தேர்வில் நல்ல வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெற்றோரும் அரசுப் பணியில் உள்ளவர்கள். பொருளாதாரத்தில் பெண்ணின் பெற்றோர் களை விட குறைந்தவர்கள் இல்லை.

எனினும் சாதி கடந்து காதல் செய்ததால் இத்தகைய கொடூரமான சம்பவம் அரங்கேற்றப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார்.

விசாரணையைக் கூட இதுவரை துவங்கவில்லை சாதிய வன்மத்துடன் நடத்தப்பட்டுள்ள இந்தப் படுகொலையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் வன்மையாகக் கண்டிப்பதாக கூறியிருக்கும் சாமுவேல் ராஜ், “முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளின் பெயர்கள்கூட இல்லை.

இதுவரை முறை யான விசாரணையே தொடங்கப்பட வில்லை” என்றும், “சிறப்புக்குழு அமைத்து புலன் விசாரணை செய்து குற்றவாளி களை விரைந்து கைது செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

“இந்தப் பிரச்சனையில், ‘எவிடன்ஸ்’ கதிர், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நிலையில், நீதி நிலைநாட்டப்படுவதற்காக, அந்த வழக்கில் நாங்களும் இணைந்து செயல் படுவோம். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் துணை நிற்கும்” என்றும் கே. சாமுவேல் ராஜ் தெரி வித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.