தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு விபத்து மரண உதவித்தொகை வழங்கல்
22 May 2026, 9:46 pm
<p><strong>தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு விபத்து மரண உதவித்தொகை வழங்கல்</strong></p><p>புதுக்கோட்டை, மே 22- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைசார்பில், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் பணியிடத்து விபத்து மரண உதவித் தொகைக்கான ஆணைகளை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு. அருணா வியாழக்கிழமை வழங்கினார். கட்டுமான தொழிலில் ஈடுபட்ட தொழிலாளி வேலை செய்து கொண்டிருந்தபோது, சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மல்லிகா, அடைக்கலம், சக்திவேல், முருகேசன் ஆகிய 4 தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, பணியிடத்து விபத்து மரண உதவித் தொகையாக தலா ரூ.5,00,000 வீதம் ரூ.20,00,000-க்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் மு.அருணா வழங்கினார். இந்நிகழ்வில், உதவிஆணையர் (தொழிலாளர் நலன்) அ.கௌரி, உதவி கணக்கு அலுவலர் செல்லத்துரை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
