சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கூடாது: புதுக்கோட்டையில் சிஐடியு ஆர்ப்பாட்டம்
28 Jun 2026, 1:22 am
<p><strong>சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கூடாது: புதுக்கோட்டையில் சிஐடியு ஆர்ப்பாட்டம்</strong></p><p>புதுக்கோட்டை, ஜுன் 27- சாலையோர வியாபாரிகளை அப்பு றப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் புதுக்கோட்டை மாநகராட்சியின் நடவடிக்கையை கண்டித்து, சிஐடியு சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னப்பா பூங்கா அருகில் இருந்து, பேராங்குளம் வரை ஆலங்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பிதான சாலை உள்ளது. இந்த சாலையின் ஓரத்தில் பழக்கடை, பழச்சாறு கடை, பூ கடை, இளநீர், தர்ப்பூசணி உள்ளிட்ட கடைகள் உள்ளன. இருபக்கமும் தார்ச்சாலையை தாண்டி அகலமாக இடம் உள்ளதாலும், இந்தக் கடைகளினாலும் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லை. பல வருடங்களாக இங்கு மேற்படி சாலையோர வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனர். இதை நம்பி பல குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாநகராட்சி நிர்வாகம் மேற்படி கடைகளை அப்புறப்ப டுத்துவதற்காக, தனது ஊழியர்களை சம்மந்தப்பட்ட இடத்திற்கு அனுப்பி வைத்தது. அவர்கள் கடைகளை அப்புறப்படுத்த முயன்ற போது, சிஐடியு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து கடையை அகற்றும் நடவடிக்கையை மாநகராட்சி ஊழியர்கள் கைவிட்டனர். ஆனாலும், திரும்ப வருவோம் என கூறிவிட்டுச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, கடைகளை அகற்ற அனுமதிக்க முடியாது எனவும், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும் அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே. முகமதலிஜின்னா தலைமை வகித்தார். சிபிஎம் மாநகரச் செயலாளர் எஸ். பாண்டியன், சிஐடியு மாநகர ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ. ரகுமான், மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் விக்கி, நிரஞ்சனாதேவி, கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
