புதுக்கோட்டையில் 5 வயது சிறுவன் 11.55 கி.மீ., தொலைவு ஸ்கேட்டிங் சாதனை
14 May 2026, 9:08 pm

புதுக்கோட்டையில் 5 வயது சிறுவன் 11.55 கி.மீ., தொலைவு ஸ்கேட்டிங் சாதனை

புதுக்கோட்டை, மே 14- புதுக்கோட்டையில் ஒரு மணி நேரத்தில் 11.55 கிமீ தொலைவு ஸ்கேட்டிங் செய்து சாதனை படைத்த 5 வயது சிறுவனுக்கு, ‘இந்தியா’ சாதனைப் புத்தக நிறுவனத்தினர் பதிவுச் சான்றிதழ் அனுப்பியுள்ளனர்.

பொழில் மகிழன் என்ற 5 வயது சிறுவன், கடந்த மார்ச் 26ஆம் தேதி கலைஞர் பூங்காவில் உள்ள ஸ்கேட்டிங் விளையாட்டுத் தளத்தில் ஒரு மணி நேரத்தில் 11.55 கி.மீ., தொலைவு ஸ்கேட்டிங் மேற்கொண்டார்.

புதுக்கோட்டை சேலஞ்சர் ரோலர் ஸ்கேட்டிங் அகாதெமியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சாதனை முயற்சி, வீடியோ பதிவு செய்யப்பட்டு, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது இச்சாதனைக்கான பதிவுச் சான்றிதழ், பதக்கம் உள்ளிட்டவற்றை இந்தியா சாதனைப் புத்தக நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.

இதுகுறித்து, பொழில் மகிழனின் தாய் சிவப்பிரியா கூறுகையில், “இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-இல் ஏற்கெனவே கேரளத்தைச் சேர்ந்த 5 ஆண்டு 6 மாத வயதுள்ள சிறுவன் 57 நிமிடங்களில் 7.18 கிமீ தொலைவைக் கடந்து சாதனை புரிந்துள்ளார்.

இந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

பொழில் மகிழன், 5 ஆண்டு 3 மாத வயது நிரம்பியவர்.

ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட சாதனையில் 57 நிமிடங்களில் 10.85 கிமீ தொலைவைக் கடந்தார்.

தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் 11.55 கிமீ தொலைவைக் கடந்து சாதனை முயற்சியை நிறைவு செய்தார்’’ என்றார்.

புதுக்கோட்டை நகரிலுள்ள தனியார் பள்ளியில் யுகேஜி பயிலும் பொழில் மகிழனின் தந்தை ராஜு நீதிமன்றப் பணியாளர் ஆவார்.

தாய் சிவப்பிரியா இல்லத்தரசி என்பது குறிப்பிடத்தக்கது.