தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வி எழுச்சியும், இடதுசாரிகள் பங்களிப்பும்

28 May 2026, 10:43 pm
புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வி எழுச்சியும், இடதுசாரிகள் பங்களிப்பும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வி எழுச்சியும், இடதுசாரிகள் பங்களிப்பும்

10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் புதுக் க்கோட்டை மாவட்டம் 97.57% தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள வரலாற்றுச் சாதனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதயப்பூர்வமாக வரவேற்கிறது.

335 பள்ளி களைச் சேர்ந்த 22,337 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 21,794 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் உதயமாகி கடந்த 52 ஆண்டுகளில் இல்லாத இந்தச் சாதனையை நிகழ்த்திய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அலுவலர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு தனது பெருமித வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த 2024-ஆம் ஆண்டில் 91.84% தேர்ச்சி யுடன் 23-ஆவது இடத்திற்குச் சென்றபோதும், கல்வித்துறை ‘இயலாமை’ என்று சோர்வடையாமல் உழைத்ததன் விளைவே இந்த மாபெரும் வெற்றியாகும்.

சாதனைக்கு வித்திட்ட அறிவொளி இயக்கம் இன்றைய கல்விச் சாதனைக்கு ஆசிரியர்களின் உழைப்பு மிக முக்கியமானது எனப் பெருமிதம் கொள்ளும் அதே வேளையில், இதன் அஸ்திவாரம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இடதுசாரி இயக்க ங்கள் செலுத்திய பங்களிப்பில் உள்ளது.

1990-களில் புதுக்கோட்டை மாவட்டம் கல்வி அறிவில் மிக வும் பின்தங்கியிருந்தது (1981-இல் 46%, 1991-இல் 57.6%). இந்த அறியாமையைப் போக்கவே ‘அறிவொளி இயக்கம்’ என்னும் மகத்தான மக்கள் பயணம் தொடங்கியது. அன்றைய மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷீலா ராணி சுங்கத் அவர்களின் தலைமையில், முற்போக்கு எழுத்தாளர்களும் ஆசிரியர்களும் கிராமப்புறங்களில் களம் இறங்கினர்.

அறிவொளி இயக்கம் என்பது வெறும் மாணவர்கள் சார்ந்த கல்வி மட்டுமல்ல; மாணவர்களைப் பெற்றெடுத்த உழைக்கும் பெற்றோர்களும் எழுதப் படிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் ஒரு முற்போக்கான சமுதாயத்தைப் படைப்பதற்கான இயக்கமாகத் திகழ்ந்தது.

அறியாமை, மூடநம்பிக்கை களுக்கு எதிரான புரட்சியாகத் திகழ்ந்த இந்த இயக்கத்தைச் சிறப்பாக நடத்தியதற்காகத் தமிழ்நாடு அரசு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திற்கு விருது வழங்கி கௌரவித்தது.

‘சைக்கிள் ஓட்ட கத்துக்கணும் தங்கச்சி’ கிராமப்புறப் பெண்களைக் கல்வி கற்க வைக்கப் பல்வேறு பாடல்கள் பயன்பட்டன

. அதில் கவிஞர் நா. முத்துநிலவன் எழுதிய, “சைக்கிள் ஓட்ட கத்துக்கணும் தங்கச்சி, வாழ்க்கைச் சக்கரத்தை சுத்தி விடு தங்கச்சி” என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் இயக்கமாக மாறியது.

பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து சைக்கிள் ஓட்டிப் பழகிய அன்றைய புரட்சியைப் பிரபல பத்திரிகையாளர் பி.சாய்நாத் ஆவணப்படுத்தினார்; இது பிபிசியிலும் செய்தியாக வெளியானது. இப்பாடல் தமிழ்நாடு பாடநூலிலும் இடம் பெற்றுள்ளது. 1

991 முதல் 1992 வரை நடைபெற்ற இந்த வெகுஜன எழுத்தறிவு இயக்கத்தால் புதுக்கோட்டை 100% எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாறியது.

வயல்வெளிக்குச் செல்லக்கூடிய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கூலி வேலைக்குச் செல்லக்கூடிய உழைப்பாளி மக்களை இரவு நேரங் களில் சந்தித்துக் கிராமியப் பாடல்கள் வழியாக அறி வொளி இயக்கம் எழுத்தறிவும், எண்ணறிவும் ஊட்டி யது.

ஏழை எளிய உழைப்பாளி மக்களின் கைகளில் இருந்த களைக்குச்சிகளுக்குப் பதிலாகச் சிலேட்டுக் குச்சிகள் வழங்கப்பட்டன.

கல்வியின் வலிமையை உணர்ந்த பெற்றோர் தங்களது குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்கத் தொடங்கினர்.

தொழிலாளர்களை முன்னிறுத்திய செங்கொடி இயக்கம் கல்குவாரிகளில் காலம் காலமாக அடிமைத் தொழி லாளர்களாக இருந்த மக்களை ஒருங்கிணைக்கத் தோழர் என். கண்ணம்மா போன்ற இடதுசாரித் தலை வர்கள் அயராது பாடுபட்டனர்.

எளிய மக்களை அதி காலை மற்றும் இரவு நேரங்களில் சந்தித்து எழுத்தறி வோடு சமூக விழிப்புணர்வையும் கற்றுக் கொடுத்ததன் விளைவாக, கல்லுடைக்கும் பெண் தொழிலாளர்கள் குவாரி குத்தகை உரிமம் பெற்று, உரிமைதாரர்களாக நிமிர்ந்து நின்றனர்.

குழந்தை உழைப்பு தடுக்கப்பட்டு, அவர்களின் உயர்கல்வி உறுதி செய்யப்பட்டது.

இடதுசாரி இயக்கங்களின் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மாதர் சங்கத்தினர், விஞ்ஞானிகள், வாலிபர் அமைப்பினர் எனப் பலரும் எந்தவிதப் பலா பலனும் எதிர்பாராமல் தெருவிளக்கின் அடியிலும், ஆலமரத்தடியிலும் வகுப்பறைகளை உருவாக்கி எழுத்தறிவுத் தூதர்களாகச் செயல்பட்டனர்.

மாணவர் அமைப்பின் பங்களிப்பு கடந்த 10 ஆண்டுகளில் மாவட்டத்தின் கல்வித் தரத்தை உயர்த்த இந்திய மாணவர் சங்கம் முத்திரை பதிக்கத்தக்கப் போராட்டங்களை நடத்தியுள்ளது.

பள்ளி, கல்லூரி மற்றும் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகளின் அடிப்படை வசதிகளுக் காகவும், குடிநீர், கழிப்பறை, ஆசிரியர் காலிப்பணி யிடங்களை நிரப்புதல் போன்ற மாணவர்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் தொடர்ந்து முன் நின்று போராடி வருகிறது.

அரசுப் பள்ளிகளைப் பாது காக்கவும், கல்வி தனியார்மயமாவதைத் தடுக்கவும் இந்திய மாணவர் சங்கம் என்றும் முன்நிற்கிறது.

கல்விச் சவால்களை எதிர்கொள்வோம் அரசின் அனைத்துத் துறை அலுவலர்களும், சமூக இயக்கங்களும் இணைந்து செயல்படும்போது மட்டுமே சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

“அரசுப் பள்ளி நம் பள்ளி”. அரசினால் மட்டுமே அனைவருக்கும் தரமான, சமமான கல்வியைக் கொடுக்க முடியும்.

புதிய கல்விக் கொள்கை என்ற பெய ரில் கல்வியை மீண்டும் எட்டாக்கனியாக மாற்றும் முயற்சியை நாம் ஒன்றுபட்டு எதிர்ப்போம். க

ளத்தில் மாணவர்களோடு கைகோர்த்து நிற்கும் ஆசிரியர்கள் நினைத்தால், எளிய வீட்டு மாணவர்களையும் மாபெரும் சிம்மாசனத்தில் அமர வைக்க முடியும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.