தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி புதுச்சேரியில் மாதர் சங்கம் நூதன போராட்டம்

28 Oct 2026, 1:06 am
விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி புதுச்சேரியில் மாதர் சங்கம் நூதன போராட்டம்

விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி புதுச்சேரியில் மாதர் சங்கம் நூதன போராட்டம்

புதுச்சேரி,அக்.27-விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி காய்கறிகளை மாலையாக அணிந்து மாதர்சங்கம் சார்பில் புதுச்சேரியில் நூதன போராட்டம் நடைபெற்றது.

வெங்காயம், தக்காளி, கீரைகள் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் அரிசி, பருப்பு, சமையல்எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். பண்டிகை பஜார்களை உடனடியாக திறக்க வேண்டும். நியாயவிலை கடையில் 9 மாதங்களாக வழங்காமல் உள்ள இலவச அரிசியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் டி.ஜி. முனியம்மாள் தலைமை தாங்கினார். சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று அத்தியாவசிய பண்டங்களின் கண்காட்சியை திறந்து வைத்து கண்டன உரையாற்றினார். தேசிய மாதர் சம்மேளனத்தின் புதுச்சேரி தலைவர் ஹேமலதா, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் தலைவர் விஜயா ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க புதுச்சேரி நிர்வாகிகள் சத்தியா,மாரிமுத்து, உமாசாந்தி உட்பட திரளான பெண்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

முன்னதாக விலைவாசி உயர்வை கண்டிக்கும் வகையில் காய்கறிகளை மாலையாக அணிந்தும், பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களை நூதன முறையில் பாக்கெட்டில் அடைத்து தோரணமாக தொங்கவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.