மகளிருக்கான 33% இடஒதுக்கீடு: மனிதச் சங்கிலி இயக்கம்!
21 Jul 2026, 12:08 am
<p><strong>மகளிருக்கான 33% இடஒதுக்கீடு: மனிதச் சங்கிலி இயக்கம்!</strong></p><p>புதுச்சேரி, ஜூலை 20– மாநிலச் சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாகச் சட்டமாக்கக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி நேரு வீதியில் மனிதச் சங்கிலி இயக்கம் நடைபெற்றது. இப்போராட்டத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் சுதா தொடங்கி வைத்து உரையாற்றினார். இதில் பெண்கள் அமைப்புகளின் நிர்வாகிகள் இளவரசி, சத்தியா, மாரிமுத்து, உமா, அன்பரசி, ஜூலியட், விஜயா, குணபூஷணம், சிவகாமி உள்ளிட்ட திரளான பெண்கள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதச் சங்கிலியாக அணிவகுத்து நின்றனர்.</p>
