தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விலைவாசி உயர்வை கண்டித்து புதுச்சேரியில் பெண்கள் விறகு அடுப்புகளுடன் ஆர்ப்பாட்டம்

1 Jul 2026, 12:15 am
விலைவாசி உயர்வை கண்டித்து புதுச்சேரியில் பெண்கள் விறகு அடுப்புகளுடன் ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து புதுச்சேரியில் பெண்கள் விறகு அடுப்புகளுடன் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஜூன் 30 - விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய ஒன்றிய மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்து, புதுச்சேரியில் பெண்கள் விறகடுப்புகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாகக் குறைக்க வேண்டும், அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும். ரேசன் திட்டத்தைச் சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரும் டிஜிட்டல் கரன்சி முறையைக் கைவிட வேண்டும். பள்ளி மாண வர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அண்ணா சிலை எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முனியம்மாள் தலைமை தாங்கினார். சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் சுதா சுந்த ராமன் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். மாநிலச் செயலாளர் இளவரசி மற்றும் நிர்வாகிகள் சத்யா, உமா விநாயகம், மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளைக் கண்டிக்கும் வகையில், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மலர் வளையம் வைத்து, பெண்கள் விறகடுப்புகளுடன் கோஷங்களை எழுப்பித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.