புதுச்சேரியில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏற்பாடு
9 Apr 2026, 5:30 am

புதுச்சேரியில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏற்பாடு

தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் பேட்டி. புதுச்சேரி, ஏப்.8- மக்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தெரிவித்தார்.

இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் 1099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 209 பதற்றமானவை என கண்டறியப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி கலை, வரலாறு அடிப்படையில் கீழுர், வடபழனி, காரைக்கால் தந்தை பெரியார் பள்ளிகளில் தனித்துவத்தமான வாக்குச்சாவடிகளை அமைத்துள்ளோம். பெண்கள் 30 வாக்குச்சாவடிகளை நிர்வகிப்பர்.

புதிய அரசு ஊழியர்கள் 15 வாக்குச்சாவடிகளையும், மாற்றுத்திறனாளி அதிகாரிகள் 2 வாக்குச் சாவடிகளையும் நிர்வகிப்பார்கள். வாக்குப்பதிவு பணிகளில் 5 ஆயிரம் அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபடுவர்.