தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதிகாரத்தில் இருந்தவர்களால் பின்னுக்கு தள்ளப்பட்ட புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி

25 Sept 2026, 1:06 am
அதிகாரத்தில் இருந்தவர்களால் பின்னுக்கு தள்ளப்பட்ட புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி

அதிகாரத்தில் இருந்தவர்களால் பின்னுக்கு தள்ளப்பட்ட புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி

புதுச்சேரி, செப்.24-புதுச்சேரி மையப் பகுதியில் அமைந்துள்ளது தட்டாஞசாவடி சட்டமன்ற தொகுதியாகும். இத்தொகுதியில் தான் பிரதானமாக தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, ஆட்சியர் அலுவலகம், மாவட்டதொழில் மையம், தொழில்துறை, குடிமை பொருள் வழங்கல் துறை ஆகிய அரசு அலுவலகங்கள் உள்ள முக்கிய தொகுதியாகும். அதேபோல் அரசு சாரா நிறுவ னங்களான பாப்ஸ்கோ, பாண்ஃ பேப், பாண்டெக்ஸ், மார்க்கெட்டிங் சொசைட்டி ஆகிய கூட்டுறவு நிறு வனங்கள் இயங்கும் தொகுதியாக உள்ளது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக உள்ள இத்தொகுதியில் நீண்ட ஆண்டுகளாக முதலமைச்சர் ரங்கசாமியே சட்ட மன்ற உறுப்பினராக வெற்றி பெற்று வந்துள்ளார்.

இத்தொகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிக்னல் பிரதானமாக உள்ளது. புதுச்சேரி நகர பகுதிக்கு வந்து செல்லும் மக்கள்ளுக்கு தொகுதியின் முகமாக உள்ள ராஜீவ் காந்தி சிக்னலை கடந்து தான், ஏனைய பகுதிக்கு செல்ல வேண்டும். அத்தகைய முக்கியம் வாய்ந்த தொகுதியில் தற்போது வளர்ச்சியற்ற தொகுதியாக ஆட்சி செய்தவர்களால் மாற்றப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் இருந்தாலும் இத்தொகுதியில் பிரதானமாக கட்டிட தொழிலாளர்கள், கடை உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் முறைசாரா தொழிலாளர்களே அதிகமாக வசித்து வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

தினந்தோறும் இத்தொகுதியில் உள்ள பிரதான சாலையான வழுதாவூர் சாலை, காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசலோடு மக்கள் மிகுந்த வேதனையோடு உயி ருக்கு பாதுகாப்பற்ற நிலையில் பயணிக்கும் அவல நிலைதான் தொடர்ந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலங்களை கட்டுவோம் என பத்து ஆண்டுகளுக்கு முன்பே அரசால் முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஆட்சியாளர்கள் இதில் அக்கறை செலுத்தாததால் அத்திட்டம் தள்ளிப்போனது. தற்போது தான் இந்த மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதேபோல் தொகுதியில் இயங்கி வந்த பாப்ஸ்கோ, பாசிக் ஆகிய கூட்டுறவு நிறுவனங்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ளது. தட்டாஞ்சாவடி தொழில்பேட்டையில் உள்ள தொழிற் கூடங்களும் ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால் வெளி மாநிலங்களுக்கு சென்று விட்டன. இத்தகைய பொலிவிழந்து இத்தொகுதி தற்போது காணப்படு கிறது. எனவே ஏற்கனவே செயல்பட்ட

தொழிற்பேட்டைகள் திறம்பட செயல்படுவதற்கும், கூட்டுறவு நிறுவனங்கள் அதிகம் இருந்த தட்டாஞ்சாவடி தொகுதியை மேலும் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்ய இடதுசாரி கட்சிகள் சார்பில் போட்டி யிடும் வேட்பாளர் அ.மு.சலீம் தனது பிரச்சாரத்தில் மக்களை சந்தித்து கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

வாக்காளர் விவரம்

இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த 19-ந் தேதி புதுச்சேரி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. தட்டாஞ்சாவடி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 12,575 , பெண் வாக்காளர் 14,341 பெண்கள், திரு நர்கள் 5 பேர் என மொத்தம் 26,921 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது இடதுசாரி கட்சி வேட்பாளர் அ.மு. சலீம் உட்பட 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.