புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் இன்று வாக்குப்பதிவு
6 Oct 2026, 1:36 am

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் இன்று வாக்குப்பதிவு

மொத்தமாக 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இறுதிக் கட்ட பிரசாரம் முடிந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.

தொகுதியில் மொத்தம் 26,921 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் 12,575 பேர், பெண் 14,341 பேர், மூன்றாம் பாலினத்த வர் 5 பேர். இதில் 350மாற்றுத்திறனாளி வாக்கா ளர்கள் மற்றும் 3 வெளிநாடு வாழ் வாக்காளர்களும் அடங்குவர்.புதிதாக சேர்க்கப்பட்ட 584 பேருக்கு வாக்கா ளர் புகைப்பட அடை

யாள அட்டை வழங்கப் பட்டுள்ளது. மேலும் 26,734 வாக்காளர்களுக்கு கியூ கார்டுடன் கூடிய வாக்கா ளர் தகவல் சீட்டு மூலம் வழங்கப்பட்டுள்ளது.31 வாக்கு சாவடிக ளுக்கும் இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாது காப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 23 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.2 தினங்களுக்கு தட்டாஞ் சாவடி தொகுதியில் உள்ள அனைத்து மது பான கடைகளும் மூட உத்தர விடப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 31 வாக்குச்சாவடிகளில் 2 பதட்டமானவை என அடையாளம் காணப் பட்டுள்ளன. இந்த வாக்கு சாவடிகளில் போலீஸ் பாதூகாப்பு கூடுதலாக போடப்படுகிறது. பெண்களே முழுமையாக நிர்வகிக்கும் பிங்க் பூத் குளூனி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.