வெண்டிங் கமிட்டி தேர்தலை உடனே நடத்த வேண்டும் சண்டே மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்!
1 hour before
<p><strong>வெண்டிங் கமிட்டி தேர்தலை உடனே நடத்த வேண்டும் சண்டே மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்!</strong></p><p>புதுச்சேரி, ஜூலை 29– புதுச்சேரி வள்ளலார் சாலையில் உள்ள செல்வ நாதன் வரவேற்பு இல்லத்தில், சிஐடியு புதுச்சேரி சாலையோர சண்டே மார்க்கெட் வியா பாரிகள் சங்கத்தின் மாநாடு புதன்கிழமை நடை பெற்றது. சங்கத் தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டை, முன்னாள் கவுரவத் தலைவர் தா.முருகன் தொடங்கி வைத்தார். செயலாளர் எச்.ராமசாமி வேலை அறிக்கையையும், பொரு ளாளர் ஸ்டெல்லா வரவு-செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தனர். சி.ஐ.டி.யு மாநிலச் செயலாளர் சீனு வாசன், மாநிலத் துணைத் தலைவர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். திரளான சாலை யோர வியாபாரிகள் இதில் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் புதிய தலைவராக ஆர். அன்பழகன், செயலாளராக எச். ராமசாமி, பொரு ளாளராக இ.பாஸ்கர் உட்பட 11 பேர் கொண்ட புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது. தீர்மானங்கள் சண்டே மார்க்கெட்டில் குடிநீர், கழிப்பிட வசதி, சுகா தாரம் போன்ற அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தித் தர வேண்டும். இருமுறை தள்ளிப் போடப்பட்ட 'வெண்டிங் கமிட்டி' தேர்தலை நகராட்சி உடனடியாக நடத்த வேண்டும். வியாபாரிகளிடம் வரி வசூலை நகராட்சியே நேரடி யாகச் செய்ய வேண்டும். அமைப்புசாரா தொழி லாளர் நல வாரியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யவும், சாலையோர வியாபாரி களுக்கு வங்கி மூலம் கடன் உதவிகளை விரை வாக வழங்கவும் வலி யுறுத்தப்பட்டது.</p>
