தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றிய அமைச்சர் பதவி விலகக் கோரி புதுச்சேரியில் மாணவர்கள் போராட்டம்

26 Jun 2026, 12:42 am
ஒன்றிய அமைச்சர் பதவி விலகக் கோரி  புதுச்சேரியில் மாணவர்கள் போராட்டம்
<p><strong>ஒன்றிய அமைச்சர் பதவி விலகக் கோரி புதுச்சேரியில் மாணவர்கள் போராட்டம்</strong></p><p>புதுச்சேரி, ஜூன் 25- நுழைவுத் தேர்வுகளைக் குளறுபடிகளுடன் நடத்தும் தேசிய தேர்வு முகமையை உடனடியாகக் கலைக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதுச் சேரியில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. தேர்வுத் தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப் பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், புதுச்சேரி பள்ளி களில் பிரெஞ்சு மொழியைத் தொடர்ந்து கற்பிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் வலி யுறுத்தினர். இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு, மாணவர் சங்கத்தின் புதுச்சேரி மாநிலச் செய லாளர் பிரவீன் குமார் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் அகிலா, ஆகாஷ், தருண், சுகவாணன், சூர்யா, அன்பு வாணன், அஜய், வர்மா உள்ளிட்ட திரளான மாண வர்கள் பங்கேற்றனர். முன்னதாக, நேரு வீதியிலிருந்து ஊர்வல மாகத் தொடங்கிய மாண வர்கள், ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகக் முழக்கங்களை எழுப்பிய வாறு ஆளுநர் மாளி கையை நோக்கிச் சென்றனர். ரங்கப்பிள்ளை வீதி அருகே காவல்துறை யினர் தடுப்புகளை அமைத்து அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.