புதுச்சேரி பாதாள சாக்கடை திட்டத்தில் தரமற்ற குழாய்கள் வெள்ளை அறிக்கை கோரி சிபிஎம் கடிதம்!
15 Jul 2026, 10:34 pm

புதுச்சேரி பாதாள சாக்கடை திட்டத்தில் தரமற்ற குழாய்கள் வெள்ளை அறிக்கை கோரி சிபிஎம் கடிதம்!

புதுச்சேரி, ஜூலை 15 புதுச்சேரியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளில் தரமற்ற மற்றும் தவறான தொழில்நுட்பம் கொண்ட குழாய்கள் பயன்படுத்தப்படு வதால், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப் படுவதோடு பொதுமக்களுக்குப் பெரும் சுகாதார அபாயம் ஏற்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக் குழு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்துப் புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்குச் சிபிஎம் சார்பில் விரிவான கடிதம் நேரில் வழங்கப்பட்டுள்ளது.

குடிநீர் குழாய்களால் காலரா அபாயம்

இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது பொருத்தப்பட்டு வரும் ‘IS 4984:2016’ தரச்சான்று பெற்ற குழாய்கள் குடிநீர் விநியோகத்திற்கு மட்டுமே உரியவை என்று குறிப்பிட்டுள்ளார். இவற்றை பாதாள சாக்கடைக்குப் பயன்படுத்துவதால், சாக்கடை நீரும் குடிநீரும் ஒன்றோடொன்று கலக்கும் கொடிய அபாயம் உள்ளது. கடந்த ஆண்டு குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் காலரா பரவி உயிரிழப்புகள் ஏற்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இக்குழாய்களுக்குச் சாக்கடைகளில் உருவாகும் ஹைட்ரஜன் சல்பைடு (H_{2}S) வாயுக்களையோ, ரசாயன அரிப்பையோ தாங்கும் திறன் கிடையாது.

வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

இவ்வளவு பெரிய தொழில்நுட்பத் தவறுக்குக் காரணமான பொதுப் பணித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். கழிவுநீர் பயன்பாட்டிற்கெனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தரமான குழாய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே, தற்போது நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், இவ்விவகாரம் குறித்துப் புதுச்சேரி அரசு பொதுவெளியில் ஒரு ‘வெள்ளை அறிக்கை’ வெளியிட வேண்டும் எனவும் சிபிஎம் வலியுறுத்தியுள்ளது. இக்கடிதத்தின் நகல்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் தலை மைச் செயலாளருக்கும் அனுப்பப் பட்டுள்ளன.