தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தாய்மொழி கல்வியை புறக்கணிக்கும் அரசுகள் புதுச்சேரியில் முஎகச கண்டன ஆர்ப்பாட்டம்!

11 Jun 2026, 11:33 pm
தாய்மொழி கல்வியை புறக்கணிக்கும் அரசுகள் புதுச்சேரியில் முஎகச கண்டன ஆர்ப்பாட்டம்!
<p><strong>தாய்மொழி கல்வியை புறக்கணிக்கும் அரசுகள் புதுச்சேரியில் முஎகச கண்டன ஆர்ப்பாட்டம்!</strong></p><p>புதுச்சேரி, ஜூன் 11- தாய்மொழி வழிக் கல்வியைப் புறக்கணிக்கும் ஒன்றிய பாஜக மற்றும் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் அரசுகளைக் கண்டித்து புதுச்சேரியில் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அண்ணா சிலை எதிரே வியாழனன்று (ஜூன் 11) நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பாவலர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். தமுஎகச வின் மாநிலக்குழு உறுப்பினர் கலியமூர்த்தி ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்தார். ஒன்றிய சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் பெயரால் தாய் வழிக் கல்வியைப் புறக்கணிப்பதைக் கைவிட வேண்டும், இந்திய - பிரெஞ்சு ஒப்பந்தத்தின் அடிப்படை யில் பாரம்பரிய பிரஞ்சு மொழிக் கல்வியைப் புதுச்சேரியில் தொடர்ந்திட வேண்டும், மும்மொழிக் கல்வித் திட்டம் என்ற பெயரால் தமிழ் மொழியைப் புறக்கணித்து இந்தியைத் திணிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் மற்றும் அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு உரிய முன்னுரிமை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. இதில் முஎக சங்கத்தின் புதுச்சேரி தலை வர் விநாயகம், துணைச் செயலர் கே.ஆர்.ரவிச்சந்திரன், எழுத்தாளர்கள் முனைவர் இளங்கோ, பாவாணன், சடகோபாலன், பாவலர் பாலசுப்ரமணியன், முனைவர் தமிழமல்லன், எல்லை. சிவக்குமார், கவிஞர் கோவிந்தராசு, பாவலர் சரசுவதி வைத்தியநாதன், இரா. பக்தவத்சலம், சிவ. ஜெகதீசன், இரா. ரமேஷ் பைரவி உட்பட திரளான எழுத்தாளர்களும் கலை ஞர்களும் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.