ஜனநாயகப் படுகொலை செய்த தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் புதுச்சேரியில் இன்று ஆர்ப்பாட்டம்
1 Oct 2026, 2:06 am

ஜனநாயகப் படுகொலை செய்த தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் புதுச்சேரியில் இன்று ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, செப்.30-புதுச்சேரியில் வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லு செய்தது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி இன்று (அக்.1) புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.இதுதொடர்பாக சிபிஎம் புதுச்சேரி மாநிலக்குழு செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரியில் "வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்" என்ற பெயரில் தேர்தல் ஆணை

யம் மேற்கொண்ட மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடக்கம் முதலே இடதுசாரி இயக்கங்கள் சுட்டிக்காட்டி எச்சரித்து வந்தன. அந்த எச்சரிக்கைகள் இன்று அப்பட்டமாக நிரூபணமாகியுள்ளது.

அக்டோபர் 2025 நிலவரப்படி புதுச்சேரியில் 10,21,578 ஆக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கையில், தீவிர திருத்தம் என்ற பெயரில் தேர்தல் ஆணையம் உள்நோக்கத் தோடு சுமார் 1,20,086 வாக்காளர்களை நீக்கியுள்ளது. அதேசமயம், வெறும் 42,719 புதிய வாக்காளர்களை மட்டுமே சேர்த்து, பிப்ரவரி 2026 இறுதிப் பட்டியலில் மொத்த வாக்காளர் எண்ணிக்கையை 9,44,211 ஆகக் குறைத்தி ருப்பது திட்டமிடப்பட்ட ஜனநாயகப் படுகொலை ஆகும்.

வழக்கமாக இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை கள ஆய்வு செய்து நிதானமாக மேற்கொள்ளப்பட வேண்டிய இப்பணியை, வெறும் இரண்டு மாதங்களில் அவசர அவசரமாக முடித்ததன் பின்னணி

யில் மிகப்பெரிய அரசியல் சதி அடங்கி யுள்ளது. ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டிய தேர்தல் ஆணையமே, ஏழை எளிய மக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து கூண்டோடு நீக்கி, அவர்களைத் தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கும் துரோகத்தைச் செய்துள்ளது.

எனவே, ஜனநாயக விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்யக் கோரி, சிபிஐ, சிபிஎம், சிபிஐ(எம்.எல்)எல் ஆகிய இடதுசாரி கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன இயக்கத்தை முன்னெடுக்கின்றன.இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை (அக்.1) காலை புதுச்சேரி, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாக்குமுடையான்பட்டில் நடைபெறுவதாக சிபி எம் புதுச்சேரி மாநிலக்குழு செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.