பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் புதுச்சேரியில் ஓய்வூதியர்கள் தர்ணா
12 hours before

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் புதுச்சேரியில் ஓய்வூதியர்கள் தர்ணா

புதுச்சேரி, செப்.18-ஓய்வூதியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வலியுறுத்தி புதுச்சேரி ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு மேடை சார்பில் புதுச்சேரியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஓய்வூதிய மறுசீரமைப்பு மசோதாவை திரும்ப பெற வேண்டும். 8-வது ஊதியக்குழுவின் பணிவரையறையை திருத்தி அதில் தற்போதைய ஓய்வூதி யர்களுக்கும் ஓய்வூதியத் திருத்தத்தை சேர்ப்பது, தேசிய ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, அக விலைப்படி 50 சதவீதத்தை தாண்டினால் அதை அடிப்படைச் சம்பளத்துடன் இணைப்பது என்பன உள்பட 11 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

தர்ணா போராட்டத்திற்கு, புதுச்சேரி ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டு மேடை ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கினார். ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன்,ராமகிருஷ்ணன், சண்முகம், நமச்சிவாயம், சீத்தாராமன், வெற்றிவேல் உட்பட திரளானோர் இப் போராட்டத்தில் பங்கேற்றனர்.