தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் மே 18இல் பதவியேற்பு மூத்த உறுப்பினர் அன்பழகன் தற்காலிக சபாநாயகர்

16 May 2026, 10:14 pm
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் மே 18இல் பதவியேற்பு  மூத்த உறுப்பினர் அன்பழகன் தற்காலிக சபாநாயகர்
<p><strong>புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் மே 18இல் பதவியேற்பு மூத்த உறுப்பினர் அன்பழகன் தற்காலிக சபாநாயகர்</strong></p><p>புதுச்சேரி, மே 16- புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்த லில் வெற்றி பெற்றுள்ள புதிய உறுப்பி னர்கள் வரும் மே 18 அன்று பதவி ஏற்றுக் கொள்கின்றனர். நடந்து முடிந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி 5-ஆவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க, சட்டப்பே ரவையின் மூத்த உறுப்பினரான அதிமுகவின் அன்பழகன் தற்காலிகப் பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் மே 18 அன்று காலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எளிய விழாவில், அன்பழகனுக்குத் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, அன்றைய தினமே சட்டப்பேரவையில் மற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் அன்பழகன் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அன்றைய தினமே பேரவையின் நிரந்தரத் தலைவரும் (சபாநாயகர்) தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.