தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு!

8 May 2026, 1:45 pm
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு!

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரியில் கடந்த 2024-ஆம் ஆண்டு, தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமி காணாமல் போனதால், அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதற்கு, 2 நாட்களுக்கு பிறகு சிறுமியின் வீட்டருகே இருந்த கால்வாயில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்ட நிலையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது வழக்கு தொடர்பாக கருணாஸ் (19) மற்றும் விவேகானந்தன் (59) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமியை ஐஸ்கிரீமை காட்டி விவேகானந்தனின் வீட்டிக்கு கருணாஸ் அழைத்து சென்றதும், அங்கு, இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியபோது சிறுமி உயிரிழந்ததும், சிறுமியின் சடலத்தை மூட்டை கட்டி அருகிலுள்ள கால்வாயில் வீசியதும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து, விவேகானந்தன், கருணாஸ் ஆகியோர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கு, விவேகானந்தன் (59) கடந்தாண்டு தற்கொலை செய்துகொண்டார். இவ்வழக்கில் கருணாஸிடம் ஒன்றரை ஆண்டுகளாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி அவர் குற்றாவாளி என புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதை தொடர்ந்து, இன்று தண்டனை விவரங்கள் இன்று அறிக்கப்பட்டது. அதில், குற்றவாளி கருணாஸுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அளிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.