புதுச்சேரி சிறுமி வன்கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை
8 May 2026, 9:54 pm
<p><strong>புதுச்சேரி சிறுமி வன்கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை</strong></p><p>புதுச்சேரி, மே 8 - புதுச்சேரி முத்தியால்பேட்டையில் 2024-ஆம் ஆண்டு மார்ச் 2 அன்று, 9 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு, கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப் பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கருணா (எ) கருணாஸ் (18), விவேகானந்தன் (56) ஆகிய இருவரில், விவேகானந்தன் கடந்த 2024 செப்டம்பரில் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து நடந்த விசாரணையில் புதுச்சேரி போக்சோ விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன்னிலையில் ஏப்ரல் 30 அன்று கருணாஸ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இவ்வழக்கை அரிதினும் அரிதான வழக்குகளில் ஒன்றாகக் கருதி மரண தண்டனை வழங்க வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் 20 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் குற்றவாளி கருணாஸுக்கு மரண தண்டனை விதித்ததுடன், சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.</p>
