புதுச்சேரி விடுதலை நாள்அணிவகுப்பு ஒத்திகை
30 Oct 2026, 11:40 pm

புதுச்சேரி விடுதலை நாள்அணிவகுப்பு ஒத்திகை

புதுச்சேரி,அக்.30-புதுச்சேரி விடுதலை நாளை முன்னிட்டு கடற்கரை சாலையில் இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரெஞ்சு காலனி ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரி பிரதேசம் கடந்த 1954 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி முறைப்படி இந்திய ஆட்சி பரப்போடு இணைந்தது. இந்நாளை புதுச்சேரியின் விடுதலை நாளாக புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.

அதன்படி நவம்பர் 1-ஆம் தேதி விடுதலை நாள் விழா கடற்கரை சாலையில் காந்தி சிலை எதிரே கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்வில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறை மற்றும் பல்வேறு துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொள்ள உள்ளார். இதனையொட்டி வெள்ளிக்கிழமை கடற்கரை சாலையில் இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல்துறை, தீயணைப்புத்துறை வீரர்கள், என்.சி.சி.,மற்றும் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் இறுதி கட்ட அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.