தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘அக்.31ல் போராட்டம் நடத்த முடிவு’விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தபுதுச்சேரி அரசுக்கு அக்கறை இல்லைஇடதுசாரி கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு

28 Oct 2026, 11:15 pm
‘அக்.31ல் போராட்டம் நடத்த முடிவு’விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தபுதுச்சேரி அரசுக்கு அக்கறை இல்லைஇடதுசாரி கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு

‘அக்.31ல் போராட்டம் நடத்த முடிவு’விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தபுதுச்சேரி அரசுக்கு அக்கறை இல்லைஇடதுசாரி கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு

புதுச்சேரி, அக்.28-விலைவாசி உயர்வை குறைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி அக்டோபர் 31-ல் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இடதுசாரி கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ எம்எல் ஆகிய இடதுசாரி கட்சி தலை

வர்கள் கூட்டம் முதலியார் பேட்டை யில் உள்ள இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிபிஎம் மாநில செயலாளர் ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் அக்கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் நாரா.கலை நாதன், சிபிஐ எம்எல் கட்சியின் மாநில நிர்வாகி பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கூட்டாக செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் என்ஆர்.காங்கி ரஸ், பாஜக கூட்டணி அரசு ஸ்தம்பித்துள்ளது. பேரவை தலைவர் கூட தேர்வு செய்ய முடியாத நிலையில் உள்ளனர். மக்கள் பிரச்சனை களை பேச சரியான எதிர்கட்சிகளும் இல்லை.

இதனால் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக இந்தியகம்யூ., மார்க்சிஸ்ட், சிபிஐ எம்எல் ஆகிய கட்சிகள் இணைந்து குரல் கொடுக்க முடிவு செய்துள்ளோம். தற்போது தலையாய பிரச்சினையாக உணவுப் பொருட்கள் பிரச்சினை உள்ளது. கடந்த 3 மாதத்தில் 20 விழுக்காடு உணவுப்பொருட்கள், காய்கறி விலைகள் உயர்ந்துள்ளது.

இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசுக்கு அக்கறை இல்லை. புதுச்சேரியில் பெரும்பாலான மக்கள் அன்றாட கூலியை நம்பி வாழ்கின்றனர். இதனால் விலைவாசி உயர்வால் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அதேநேரத்தில் ரேஷன்கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்குவோம் என கூறிய அரசு, இலவச அரிசியைக்கூட வழங்க வில்லை.

ஜனவரி, பிப்ரவரி மாத இலவச அரிசிக்கு பதிலாக பணத்தை இப்போதுதான் வழங்கியுள்ளனர். மீண்டும் நேரடி பண பரிமாற்ற திட்டத்தை அரசு நிறைவேற்றி வரு கிறது. புதுச்சேரியில் அரிசி பதுக்கல் செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் மளிகை பொருட்கள், எண்ணெய், சர்க்கரை தேவைகள் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ரூ.55ல் இருந்து ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. ஆனால்புதுச்சேரியில் ரூ.85 ஆக உயர்ந்து ள்ளது. இதனால் பொருட்களே வாங்க முடியாத நிலைக்கு மக்கள் சென்றுள்ளனர். அரசு வியாபாரிகளை அழைத்து பேசி விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசே அத்தியாவசிய பொருட் களை ரேஷன்கடைகள் மூலம் வழங்கவேண்டும். பொது விநியோக திட்டத்தின்படி ஏழை எளிய மக்க ளுக்கு அத்தியாவசிய பண்டங்களை கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் வரும் 31ம் தேதி புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல்துறை முன்பு போராட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.