புதுச்சேரி அரசு பணிஆணை வழங்கும் விழா…
1 Dec 2025, 5:20 pm
<p><strong>புதுச்சேரி அரசு பணிஆணை வழங்கும் விழா…</strong></p>
<p>புதுச்சேரி அரசு, பணியாளர்- சீர்திருத்தத்துறை மற்றும் வருவாய்- பேரிடர் மேலாண்மை துறைகளில் நிர்வாக உதவியாளர், கிராம நிர்வாக அதிகாரி, கிராம உதவியாளர் மற்றும் பல்நோக்கு ஊழியர் பணியிடங்களுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி ஆணைகள் வழங்கும் விழா , கம்பன் கலையரங்கத்தில் திங்களன்று நடைபெற்றது. விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கினார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலர் சரத் சௌகான்,வளர்ச்சி ஆணையர் கிருஷ்ணமோகன் உப்பு, பணியாளர் சீர்திருத்தத்துறை செயலாளர் கேசவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
