பிப்ரவரி 12 நாடு தழுவிய வேலைநிறுத்தம் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அழைப்பு
24 Jan 2026, 3:38 pm
<p><strong>பிப்ரவரி 12 நாடு தழுவிய வேலைநிறுத்தம் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அழைப்பு</strong></p>
<p>புதுச்சேரி, ஜன. 24- அரசுத் துறைகளைப் பாதுகாக்க பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத் தில் அரசு ஊழியர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தேசியப் பொதுச் செயலாளர் எஸ்.பி. யாதவ் அறைகூவல் விடுத்துள்ளார். புதுச்சேரி மாநில அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் 50-ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 4-ஆவது மாநில மாநாடு கம்பன் கலை யரங்கத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மூன்று நாட்கள் நடை பெறும் இம்மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாகப் பொது மாநாடு நடை பெற்றது. சம்மேளனத் தலைவர் ரவிச்சந்திரன் இதற்குத் தலைமை தாங்கினார். முன்னாள் பொதுச் செய லாளர் கே. முருகன் வரவேற்புரை ஆற்றி னார். மாநாட்டில் எஸ்.பி. யாதவ் பேசுகை யில், “இந்தியாவில் புதிய பொருளா தாரக் கொள்கையின் விளைவாகப் பொதுத்துறைகள் மட்டுமின்றி, அரசுத் துறைகளும் தனியார்மயத்தை நோக்கித் தள்ளப்பட்டுள்ளன. தொழிலா ளர் நலச் சட்டங்களைச் சட்டத் தொகுப்பு களாக மாற்றியதன் மூலம் ஒன்றிய பாஜக அரசு தொழிலாளர்களின் உரிமை களைப் பறித்துள்ளது. எனவே, அரசுத் துறைகளைப் பாதுகாக்க பிப்ரவரி 12 வேலைநிறுத்தத்தைப் புதுச்சேரியிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா,மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தேசிய செயலாளர் எம்.எஸ்.வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் வே.விஜயகுமாரன், வரு மான வரித்துறை ஊழியர்கள் சங்கத்தின் புதுச்சேரி சரக செயலாளர் கோவிந்தன், அனைத்திந்திய இன்சுரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் கோட்டக் இணைச்செயலாளர் வேலா யுதம் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கௌரவத் தலைவர் பிரேம தாசன் செயல்தலைவர் ராதா கிருஷ்ணன், பொதுச்செயலாளர் முனுசாமி, துணைப் பொதுச்செய லாளர் லலிதா, பொருளாளர் வானவ ரம்பன் உள்ளிட்ட திரளான அரசு ஊழியர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.</p>
