தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி தொடர அரசு உரிய நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி உறுதி

19 Jun 2026, 12:48 am
புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி தொடர  அரசு உரிய நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி தொடர அரசு உரிய நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி, ஜூன் 18- புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கல்வி தொடர்ந்து கற்பிக்கப்பட அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரி கடற்கரை சாலையில் 200 ஆண்டுகால பாரம்பரியமிக்க கட்டிடத்தில் ‘பான்சியோனா பிரெஞ்ச் அரசுப் பள்ளி’ இயங்கி வந்தது. பான்சியோனா ஸ்மித் என்பவரால் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த பள்ளி, பெண்களுக்கான பிரத்யேகப் பள்ளியாகவே செயல்பட வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. இக்கட்டிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு சிதலமடைந்ததால், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டது. இதைக் காரணம் காட்டி பள்ளியை மூட கல்வித்துறை திட்டமிட்டது.

மாணவர் சங்கப் போராட்டம்

நாட்டில் உள்ள ஒரே பெண்கள் பிரெஞ்சு அரசுப் பள்ளியான இதைப் பாதுகாக்க, இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தின. இப்பள்ளியை வேறு பள்ளியுடன் இணைக்கக் கூடாது, பிரெஞ்சு கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அதே இடத்தில் தனித்துவமாக இயங்க வேண்டும், கட்டிடத்தைப் பாரம்பரிய முறையில் புதுப்பிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய கட்டிடம்

போராட்டங்களின் விளைவாக, சிதலமடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு, அதே பாரம்பரியக் கலை வடிவில் புதிய கட்டிடம் கட்ட புதுச்சேரி அரசு முன்வந்தது. இதற்காக ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ. 7.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

முதல்வர் திறப்பு விழா

புதிதாகக் கட்டப்பட்ட பிரெஞ்சு கலை வடிவிலான பள்ளி கட்டிடத்தை முதல்வர் ரங்கசாமி வியாழனன்று (ஜூன் 18) ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் முதல்வர் பேசியதாவது: “புதுச்சேரியில் பலருக்கும் பிரெஞ்சு மொழியைக் கற்கும் ஆர்வம் உள்ளது. புதிய கல்விக் கொள்கையின் கீழ் மத்திய அரசு ஒரு மொழியை நீக்கலாம் என்று கூறியிருந்தாலும், புதுச்சேரியில் பிரெஞ்சு மொழி பாடமாகத் தொடர வேண்டும் என வலியுறுத்தி எனது அரசு ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. தொடர்ந்து பிரெஞ்சு மொழி கற்க உரிய நடவடிக்கைகளை என் அரசு எடுக்கும்.” இந்த விழாவில் தற்காலிகப் பேரவைத் தலைவர் அன்பழகன், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பிரெஞ்சு துணை கான்சல் ஜெனரல் ஜீன் பிலீப் ஹெட்தர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.