தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மீனவ கிராமங்களின் பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க உண்மை அறியும் அறிக்கை வெளியீடு

yesterday
மீனவ கிராமங்களின் பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க உண்மை அறியும் அறிக்கை வெளியீடு
<p><strong>மீனவ கிராமங்களின் பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க உண்மை அறியும் அறிக்கை வெளியீடு</strong></p><p>​​​​​​​புதுச்சேரி, ஜூன் 21- புதுச்சேரி கனகசெட்டிகுளம் முதல் மூர்த்திக்குப்பம் வரை மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள கடற்கரை மீனவ கிரா மங்களின் பொதுச் சொத்துக்களைப் பாது காக்க புதுச்சேரி அரசை வலியுறுத்தி, “மீனவ கிராமங்களும் அதன் பொது சொத்துக்க ளும்” என்ற உண்மை அறியும் அறிக்கை புத்தக வெளியீட்டு விழா ஜெயராம் உணவ கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக் குழு மற்றும் தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப் பின் தலைவர் மங்கையர் செல்வன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார். விழாவில் கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்க நிர்வாகி பிரபாகர், சூழலியல் ஆய்வாளர் நித்தியா, நிர்வாகிகள் மலையாளத்தான், தணிகாசலம், வெங்கடேசன், சக்திவேல், அருணாசலம் மற்றும் புதுச்சேரி, காரைக் கால் மீனவ கிராமத் தலைவர்கள் பங்கேற் றனர். முன்னதாக காம்ரேட் டாக்கீஸ் தயாரித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.