குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,500 உதவித்தொகை வழங்குக புதுச்சேரி சமம் பெண்கள் மாநாடு வலியுறுத்தல்
20 Dec 2025, 3:38 pm
<p>புதுச்சேரி, டிச. 20- புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாத உதவித்தொகையாக ரூ.2,500 வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் சமம் பெண்கள் சுயசார்பு இயக்கத்தின் 11-ஆவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. புதுச்சேரி நவீனா கார்டன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு இயக்கத்தின் தலைவர் அன்பரசி ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்தியச் செயலாளர் பி.சுகந்தி மாநாட்டைத் துவக்கி வைத்தார். த.மு.எ.க.ச. மாநிலப் பொருளாளர் சைதை ஜெ, புதுச்சேரி கிராம வங்கித் தலைவர் ரத்தினவேல், அறிவியல் இயக்கத் தலைவர் டாக்டர் மதிவாணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். புதிய நிர்வாகிகள் தேர்வு மாநாட்டில் தலைவராக அன்பரசி ஜெயக்குமார், பொதுச்செயலாளராக ஏ.இந்திரா, பொருளாளராக எம்.இளவரசி உள்ளிட்ட 31 பேர் கொண்ட புதிய மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
