தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுச்சேரி அரசு போட்டித்தேர்வுகளில் வயது வரம்பு தளர்வு செய்ய வேண்டும் வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

4 Nov 2026, 11:13 pm
புதுச்சேரி அரசு போட்டித்தேர்வுகளில் வயது வரம்பு தளர்வு செய்ய வேண்டும் வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

புதுச்சேரி அரசு போட்டித்தேர்வுகளில் வயது வரம்பு தளர்வு செய்ய வேண்டும் வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

புதுச்சேரி, நவ.4-இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவு பணிக்கான சிறப்பு வயது வரம்புத் தளர்வு வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் கௌசிகன், செயலாளர் சஞ்சய் சேகரன் ஆகியோர் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அண்டை மாநிலமான தமிழகத்தில் அவ்வபோது அரசு போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தாலும் சில துறைகளுக்கு 5 ஆண்டு

கள் சிறப்பு வயது வரம்பு தளர்வு அளிக்கப்பட்டுள்ளதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வரவேற்கிறது. அதே

நேரத்தில் அனைத்து அரசு துறைகளுக்கும் சிறப்பு வயது வரம்பு தளர்வை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் பல ஆண்டுகளாக தேர்வுகள் நடத்தப்படாமல் கொல்லைப்புற நியமனங்கள் மூலம் ஆட்சியாளர்கள் ஆட்களை வேலைக்கு அமர்த்தி மாநிலத்தின் இளை

ஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி யாக்கியுள்ளனர். எனவே வாய்ப்புகளே வழங்கப்படாமல் குறிப்பிட்ட வய துடையோரை வயதை காரணம் காட்டி போட்டியில் இருந்து வெளியேற்றுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. புதுச்சேரி மாநிலத்தில் அரசு போட்டித்தேர்வுகளில் வயதின் காரணமாக ஒரு தகுதியான இளை ஞருக்கு கூட வாய்ப்பு மறுக்கப்பட்டுவிட கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்துகிறது.

ஐஆர்பிஎன் பிரிவு காவலர் பணி உட்பட அனைத்து ஆட்சேர்ப்பிலும் வயது வரம்பைக் கடந்துள்ள தகுதி யான இளைஞர்கள் அனைவரும் விண்ணப்பிக்கவும், தேர்வில் பங்கேற்கவும் ஏதுவாகச் சிறப்பு வயது வரம்புத் தளர்வு உடனே வழங்க வேண்டும். ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு முன்பே இந்த அரசாணை வெளியிட வேண்டும்.

2015ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட ஆட்சேர்ப்பு இடைவெளியால் எந்தவொரு தகுதியான இளைஞரும் வயது வரம்பு காரணமாக மட்டும் ஐஆர்பிஎன் காவலர் பணிக்கான வாய்ப்பை இழக்கக் கூடாது.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.