தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆதி திராவிட மக்களுக்கு தீபாவளி புத்தாடை நிதியை உயர்த்த வேண்டும் புதுச்சேரி அரசை தீஓமு வலியுறுத்தல்

30 Oct 2026, 11:41 pm
ஆதி திராவிட மக்களுக்கு தீபாவளி புத்தாடை நிதியை உயர்த்த வேண்டும் புதுச்சேரி அரசை தீஓமு வலியுறுத்தல்

ஆதி திராவிட மக்களுக்கு தீபாவளி புத்தாடை நிதியை உயர்த்த வேண்டும் புதுச்சேரி அரசை தீஓமு வலியுறுத்தல்

புதுச்சேரி,அக்.30-ஆதிதிராவிடர், பழங்குடியின மக்க ளுக்கு தீபாவளி புத்தாடை வாங்குவதற்காக வழங்கப்படும் நிதியுதவியை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுச்சேரி தலைவர் கொளஞ்சியப்பன் செயலாளர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர் அர்ஜுன் ராமகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.

அதில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாழும் 18 வயது பூர்த்தியடைந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வேட்டி, சேலை வழங்குவதற்குப் பதிலாக, தலா ரூ.1,000 ரொக்கமாக வழங்குவதற்கு புதுச்சேரி அரசு எடுத்துள்ள முடிவை வர வேற்கிறோம்.

அதேவேளையில், தற்போதைய பொருளாதாரச் சூழலில் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. இந்நிலையில், அரசு அறி வித்துள்ள தொகையைக் கொண்டு ஓரளவு தரமான புத்தாடைகளை குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி இருவருக்கும் வாங்க முடியாது. குறிப்பாக, குடும்பங்களின் பொருளாதாரச் சுமை அதிகரித்துள்ள சூழலில், தீபா வளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்குப் போதுமான நிதியுதவி வழங்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

எனவே, புதுச்சேரி அரசு அறிவித்துள்ள தீபாவளி புத்தாடை நிதியுதவியை மறுபரிசீலனை செய்து, தற்போதைய விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு, பயனாளிகள் ஒவ்வொரு வருக்கும் வழங்கப்படும் தொகையை ரூ.1,000-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.