துச்சேரியில் ரேஷன் முறையைச் சீர்குலைக்கும் ‘கேஒய்சி’ பதிவுத் திட்டம்
27 May 2026, 10:01 pm

புதுச்சேரியில் ரேஷன் முறையைச் சீர்குலைக்கும் ‘கேஒய்சி’ பதிவுத் திட்டம்

புதுச்சேரி, மே 27- ரேஷன் முறையை முடக்கும் புதுச்சேரி அரசின் ‘கேஒய்சி’ (KYC) பதிவுத் திட்டம் மற்றும் ப்ரீபெய்ட் மின் மீட்டர் திட்டத்தைக் கண்டித்து, இடது சாரி கட்சிகளுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய கண்டனப் பிரச்சார இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுச்சேரி மாநிலக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணன் பங்கேற்றுப் பேசினார்.

மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்தி ரன், மாநிலச் செயற்குழு உறுப்பி னர்கள் சுதா சுந்தரராமன், வி.பெரு மாள், ஆர்.ராஜங்கம், தமிழ்ச்செல்வன் உட்பட மாநிலக் குழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி தேர்தல் முடிவுகளும் மக்கள் விரோதத் திட்டங்களும் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விவ ரித்தனர்.

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் கேரளம், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங் களில் ஆளுங்கட்சிகள் தோற்கடிக்கப் பட்டுள்ள சூழலில், புதுச்சேரியில் என். ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்திருப்பது வருத்தமளிப்பதாக கே.பால கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இந்தியா கூட்டணிக்குள் ஏற்பட்ட முரண்பாடு களும், சரியான முறையில் கூட்டணி அமைக்காததுமே இக்கூட்டணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்து விட்டது என அவர் சுட்டிக்காட்டினார்.

இதனைப் பயன்படுத்தி, தற்போ தைய அரசு மக்கள் விரோதத் திட்டங் களைத் துரிதப்படுத்தத் தொடங்கி யுள்ளதாகச் சாடிய அவர், ரேஷன் முறையைப் பின்னுக்குத் தள்ளும் டிஜிட்டல் கரன்சி என்ற வினோத மான ‘கேஒய்சி’ பதிவுத் திட்டம் மற்றும் ப்ரீபெய்ட் மின் மீட்டர் பொருத்தும் திட்டம் ஆகியவற்றை அரசு கொண்டு வர உள்ளதாகக் கவலை தெரிவித் தார்.

இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்து ஏனைய இடதுசாரி கட்சி களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கட்சி மிக விரைவில் தீவிரப் பிரச்சார இயக் கங்களை முன்னெடுக்கும் என அவர் தெரிவித்தார்

. தமிழக அரசியல் சூழல் தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பேசிய கே.பாலகிருஷ் ணன், தமிழ்நாட்டில் குடியரசுத் தலை வர் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்ற நோக்கிலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு இடதுசாரிகள் மற்றும் விசிக உள்ளிட்ட மதச்சார் பற்ற கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட் டார்

மக்களுக்கு நேர்மையான, தூய் மையான ஆட்சியைத் தருவோம் என்ற தவெக-வின் வாக்குறுதியை நம்பியே இந்த ஆதரவு வழங்கப் பட்டுள்ளது என்றார்.

ஆனால், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்த உடனே தவெகவில் இணைந்திருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி யுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய அதிரடித் தாவல்கள் குதிரை பேரத்திற்கு வழிவகுத்திருக் குமோ என்ற அச்சம் எழுவதாகவும், இது ஆரோக்கியமான அரசியலை நோக்கி தவெக பயணிப்பதற்குப் பெரும் தடையாகவும் மாறும் என்றும், இதனைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார் கள் என்றும் கே.பாலகிருஷ்ணன் எடுத்துரைத்தார்.

தொடர் போராட்டம் முன்னதாகப் பேசிய மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் ரேஷன் சீர்குலைவு ‘கேஒய்சி’ முறையையும், ப்ரீபெய்ட் மின் மீட்டர் திட்டத்தையும் புதுச்சேரி அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், மும்மொழித் திட்டத்தைத் திணிக்கும் ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித் தும், வாடகை வீட்டில் குடியிருப்பவர் களுக்கு அரசு சார்பில் வாடகைப்படி வழங்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மிக விரைவில் தொடர் கண்டனப் போராட்டங்கள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.