வலு தூக்கும் போட்டியில் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
4 Nov 2026, 1:12 am

வலு தூக்கும் போட்டியில் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

புதுச்சேரி, நவ.3-வலு தூக்கும் போட்டி யில் பதக்கங்களைப் பெற்றவீரர்களுக்கு புதுச்சேரி அரசு

உடனே ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தென்னிந்திய அளவி லான வலு தூக்கும் போட்டிகேரள மாநிலம் கண்ணூ ரில் நவம்பர் 1 ஆம் தேதி துவங்கி 4 வரை நடைபெறுகிறது.இப்போட்டியில் புதுச் சேரியைச் சேர்ந்தவர்கள் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். ஜூனியர் மகளிர் பிரிவில் மினிமதி தங்கப் பதக்கம் பெற்றார். சீனியர் மகளிர் பிரிவில் அகி

லாண்டேஸ்வரியும், ஜூனி யர் ஆண்கள் பிரிவில் தினேஷ், சீனியர் ஆண்கள் பிரிவில் பன்னீர்செல்வம் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றனர்.

அதே போல் சிஐடியு ஆட்டோ சங்க தலை வர்களில் ஒருவரான மது (எ) லிங்கேசன்வேலு சீனி யர் பிரிவிலும் அவரது மகன் நவின் ஜூனியர் பிரிவிலும் பங்கேற்று வெண்கல பதக்கங்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.

பதக்கங்களைப் பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ள வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரி வித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், வீரர்களுக்கு புதுச்சேரி அரசு வழங்க வேண்டிய ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.