அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சீருடை தையல் கூலி உயர்வு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
15 Jul 2026, 11:21 pm
<p><strong>அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சீருடை தையல் கூலி உயர்வு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு</strong></p><p>புதுச்சேரி, ஜூலை 15- புதுச்சேரியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மாணவர் நாள் விழாவில், முதல்வர் ரங்கசாமி அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடை பெற்ற இந்த விழாவிற்கு முதல்வர் ரங்கசாமி தலைமை வகித்தார். விழாவில் உரையாற்றிய முதல்வர், புதுச்சேரியில் ஏழை மாணவர்களும் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவர்க ளுக்கு உயர்கல்வியில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுவதையும், மருத்துவக் கல்வி உட்பட அனைத்து உயர் படிப்புகளுக்கும் அரசே கட்ட ணத்தை ஏற்றுக்கொள்வதையும் பெரு மிதத்துடன் குறிப்பிட்டார். ஏழை மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் வகையில், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகளுக்கான தையல் கூலியை உயர்த்தி வழங்குவ தாக அவர் அறிவித்தார். மேலும், தற்போது அமலில் உள்ள மாணவர்க ளுக்கான சிறுதானிய உணவுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். விழா வில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பி னர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரி கள் கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு களை வழங்கினர்.</p>
