முந்தய பக்கம்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விடுதலை நாள் வாழ்த்து

1 Nov 2026, 2:01 am
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விடுதலை நாள் வாழ்த்து

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விடுதலை நாள் வாழ்த்து

புதுச்சேரி,அக்.31-புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விடுத்துள்ள விடுதலை நாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

1954 ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள், புதுச்சேரி பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்தியத் தாய்நாட்டின் நிர்வாகத்தில் இணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நன்னாளாகும், இந்தியத் தாயின் அரவணைப்பில் புதுச்சேரி இணைந்து, புதிய நம்பிக்கையுடன் தனது வளர்ச்சிப் பயணத்தைத் தொடங்கிய பொன்னாளாகும். நமது மண்ணின் விடுதலைக்காகப் போராடிய தியாகிகளின் துணிவையும், மக்களின் ஒற்றுமையையும், தாய்நாட்டுப் பற்றையும் இந்நாளில் நன்றியுடன் நினைவுகூர்வது நம் அனைவரின் கடமையாகும்.

இந்த விடுதலை நாளில், “தியாகத்தைப் போற்றுவோம்; ஒற்றுமையைக் காப்போம்; வளர்ச்சியை அனைவருக்கும் கொண்டுசெல்வோம்” என்ற உறுதியை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்வோம் என்று கூறி அனைவருக்கும் எனது இனிய புதுச்சேரி விடுதலை நாள் நல்வாழ்த்துகளை ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் முதல்வர் கூறியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram