தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுச்சேரி: தேசிய விருது பெற்ற கைவினை கலைஞர்களுக்கு ஊக்க நிதி முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்

8 Jul 2026, 10:53 pm
புதுச்சேரி: தேசிய விருது பெற்ற  கைவினை கலைஞர்களுக்கு  ஊக்க நிதி  முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
<p><strong>புதுச்சேரி: தேசிய விருது பெற்ற கைவினை கலைஞர்களுக்கு ஊக்க நிதி முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்</strong></p><p>புதுச்சேரி, ஜூலை 8- புதுச்சேரி மாநிலத்தில் 1991 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் தேசிய விருது பெற்ற 6 கைவினை கலைஞர்களுக்கு, முதலமைச்சர் என். ரங்கசாமி ஊக்க நிதி வழங்கி கௌரவித்தார். கதிர்காமத்தில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், காரைக்காலைச் சேர்ந்த ராம கிருஷ்ணன், புதுச்சேரியைச் சேர்ந்த பத்மஸ்ரீ முனுசாமி, மற்றும் கலைஞர்கள் சேகர், மாசிலாமணி, வெங்கடேசன், மோகன்தாஸ் ஆகியோருக்கு மாவட்ட தொழில் மையத்தின் ‘கைவினை அபிவிருத்தித் திட்டம்’ மூலம் தலா ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை முதல மைச்சர் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஜெயராமன், திட்ட மேலாளர் ஹேமலதா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். புதுச்சேரியின் பாரம்பரிய கைவினை கலையை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றிய கலைஞர்களை அங்கீகரிப்பதன் மூலம், அடுத்த தலைமுறைக்கும் இக்கலையைக் கொண்டு சேர்க்கவும், கலைஞர்களை ஊக்கப்படுத்தவும் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.