தீயணைப்புத்துறையில் பணி நியமன ஆணை: முதல்வர் ரங்கசாமி வழங்கினார்
15 Jul 2026, 1:29 am

தீயணைப்புத்துறையில் பணி நியமன ஆணை: முதல்வர் ரங்கசாமி வழங்கினார்

புதுச்சேரி, ஜூலை 13 – புதுச்சேரி தீயணைப்புத் துறையில் காலியாக இருந்த 58 தீயணைப்பு வீரர் பணியிட ங்களை நிரப்புவதற்காக, கடந்த காலங்களில் உடற் தகுதி மற்றும் எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டுத் தகுதியான நபர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். இந் நிலையில், பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களில் மூவர் சமீபத்தில் சொந்தக் காரணங்களால் தங்களது பணியை ராஜி னாமா செய்தனர். இதனால் ஏற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், தகுதிப் பட்டிய லின்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்த தகுதி யான 3 நபர்களுக்கு (1 ஆண், 2 பெண்கள்) பணி நிய மனம் வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்தது. இதற்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, புதுச் சேரி சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலு வலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. முதல மைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு, தேர்வு செய்யப் பட்டவர்களுக்குப் பணி நிய மன ஆணைகளை வழங்கி னார். இந்நிகழ்வின்போது, கோட்டத் தீயணைப்பு அதி காரி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்த னர்.