தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் ரங்கசாமி!
6 May 2026, 2:33 pm

புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார் முதலமைச்சர் என்.ரங்கசாமி.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட முதலமைச்சர் என்.ரங்கசாமி, இரு தொகுதியிலும் வெற்றி பெற்றார். இந்த சூழலில், விரைவில் தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார் என்.ரங்கசாமி.

மேலும், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பாக அசோக் ஆனந்த் போட்டியிடுவார் எனவும் அறிவித்துள்ளார்.