புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தல் இந்திய மாணவர் சங்கம் தலைமையிலான இடது மாணவர் அணி அமோக வெற்றி!
8 Nov 2025, 2:42 pm
<p><strong>புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தல் இந்திய மாணவர் சங்கம் தலைமையிலான இடது மாணவர் அணி அமோக வெற்றி!</strong></p>
<p>புதுச்சேரி, நவ. 8 - புதுச்சேரி மத்திய பல்கலைக்கழ கத்தில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் தலைமையிலான இடது மாணவர் அணி அமோக வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல், ஆண்டின் இறுதியில் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் களத்தில் 4அணிகள் இதில், 2025-2026ஆம் ஆண்டிற்கான மாணவர் பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாண வர் பெருமன்றம் ஆகிய இடது மாணவர் அமைப்புக்கள் ஒரு அணியாகவும், தேசிய மாணவர் காங்கிரஸ், முஸ்லிம் மாணவர் அமைப்பு இணைந்து ஒரு அணியாகவும், ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி, அம்பேத்கர் மாண வர் அமைப்பு ஆகியவை தனித் தனியாக வும் போட்டியிட்டன. மொத்தம் நான்கு அணிகள் களத்தில் இருந்தன. பல்கலைக்கழக வளாகங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்; புதுச்சேரி மாணவர்களுக்கு 25 விழுக் காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது; பல்கலைக்கழகத்தில் மாண வர்களுக்கான அடிப்படைக் கட்ட மைப்புகளை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை முன் வைத்தும், இந்த கோரிக்கைகளை நிறை வேற்ற நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும் என்று உறுதியளித்தும் இந்திய மாணவர் சங்கம் தலைமையிலான இடது மாணவர் அணி பிரச்சாரம் மேற் கொண்டது. முதற்கட்ட தேர்தலில் எஸ்எப்ஐ வெற்றி முதற்கட்டமாக 115 பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் நவம்பர் 5 அன்று நடைபெற்றது. புதுச்சேரி, அந்தமான், மாஹே, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைகழக மாணவர்கள் தேர்தலில் வாக்களித்தனர். இதில், இந்திய மாணவர் சங்கம் தலைமையிலான இடது மாணவர் அணி 68 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. அதேபோல் பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் 3 பேர் கொண்ட புகார் கமிட்டி பிரதிநிதிகளுக் கான மூன்று இடங்களையும் இந்திய மாணவர் சங்க பிரதிநிதிகளே கைப் பற்றினர். இரண்டாம் கட்ட தேர்தல் முதற்கட்ட தேர்தலில் தேர்ந்தெ டுக்கப்பட்டவர்கள் மூலம் இரண்டாம் கட்டமாக, அதிகாரப்பூர்வ பிரதிநிதி களை தேர்வு செய்யும் தேர்தல் நவம்பர் 8 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் புதுச் சேரி மாநிலக் குழுவின் வழிகாட்டுத லோடு, இத்தேர்தலில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு நிறுத்தப் பட்ட வேட்பாளர் உட்பட அனைத்து பதவி களையும் இந்திய மாணவர் சங்கம் தலை மையிலான இடது மாணவர் அணி கைப் பற்றி சாதனைப் படைத்துள்ளது. 15 இடங்களையும் கைப்பற்றிய இடது அணி மாணவர் பேரவைத் தலைவராக யாலமகுறி ஸ்ரேஷ்டா, பொதுச் செயலா ளராக சையத் இனாயத் ஹுசைன், துணைத் தலைவர்களாக பரசுராம், ஷியோனா . சி, இணைச் செயலாள ராக அறிவாழியன் ஆகியோர் தேர்ந்தெ டுக்கப்பட்டனர். அதேபோல நிர்வாக குழு உறுப்பினர்களாக விஷ்ணு, பிர ணவ், கீர்த்தி வாசன், நைஷின் டேனிஷ், அன்னா ஷஹ்லா, நிதா பாத்திமா, நிலா, ஜோதிர்மயி, ஸ்வைன், வர்ஷா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உட்பட 15 இடங்களையும் இடது மாணவர் அணி கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமன்றி புதுச்சேரி பல்க லைக்கழக மாணவர் பேரவையை தொடர்ந்து 5-ஆவது முறையாக இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையிலான அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத் தக்கது. மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து வெற்றிபெற்ற மாணவர் பேரவை நிர்வாகிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், புதுச்சேரி மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுதா சுந்தரராமன், வி. பெருமாள், ஆர். ராஜாங்கம் உள் ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய செயற்குழுவும் இந்த வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. ஆர்.முருகன் </p>
