தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிலாளர் அடக்குமுறைக்கு எதிர்ப்பு புதுச்சேரியில் மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

13 May 2026, 2:46 am
தொழிலாளர் அடக்குமுறைக்கு எதிர்ப்பு  புதுச்சேரியில் மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>தொழிலாளர் அடக்குமுறைக்கு எதிர்ப்பு புதுச்சேரியில் மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>புதுச்சேரி, மே 12- இந்தியாவின் வடக்கு மற்றும் ஒன்றிய மாநி லங்களில் தங்களின் வாழ்வாதார உரிமைக் காகப் போராடி வரும் தொழி லாளர்கள் மீது ஏவப்படும் அடக்கு முறைகளைக் கண்டித்து, புதுச்சேரியில் செவ்வாயன்று அனைத்து மத்திய தொழிற்சங் கங்கள் சார்பில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் நடை பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு மாநில பொதுச் செய லாளர் சீனுவாசன், ஏஐ டியுசி மாநில தலைவர் தினேஷ் பொன்னையா மற்றும் எல்.எல்.எப் மாநில துணைத்தலைவர் கலை வண்ணன் ஆகிய மூவரும் கூட்டாகத் தலைமை தாங்கினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில், நியாயமான கோரிக்கை களுக்காகப் போரா டும் தொழிலாளர்களைக் கைது செய்யும் நடவடிக்கை களை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், சிறையிலுள்ள தொழி லாளர்கள் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்களை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் வழக்கு களைத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் தொழிலாளர் நல னுக்கு எதிரான சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆவேச மாக முழக்கங்கள் எழுப்பப் பட்டன. இந்நிகழ்வில் ஏஐசிசிடியு மாநில பொதுச் செயலாளர் புருஷோத்தமன், என்டி எல்எப் மாநில பொதுச் செயலாளர் மகேந்திரன், எம்எல்எப் மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி, ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் இரா. அந்தோணி, எல் எல்எப் மாநில செயலாளர் கார் முகில் மற்றும் ஏஐசிசிடியு அகில இந்திய துணைத் தலைவர் பாலசுப்பிரமணி யன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் திரளான தொழிலாளர்கள் பங்கேற்றுத் தங்களின் ஒருமைப்பாட்டை வெளிப் படுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.