தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தாய் வழி பூர்வீக சாதிச் சான்றிதழ் வழங்க மறுக்கும் புதுச்சேரி அரசு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

5 Jun 2026, 3:18 am
தாய் வழி பூர்வீக சாதிச் சான்றிதழ்  வழங்க மறுக்கும் புதுச்சேரி அரசு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கண்டனம்!
<p><strong>தாய் வழி பூர்வீக சாதிச் சான்றிதழ் வழங்க மறுக்கும் புதுச்சேரி அரசு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!</strong></p><p>புதுச்சேரி, ஜூன் 4- புதுச்சேரி மாநிலத்தில் தாய் வழி பூர்வீ கத்தைக் கொண்டு சாதிச் சான்றிதழ் வழங்க மறுத்து, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கி வரும் புதுச்சேரி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தந்தையின் பூர்வீகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சாதிச் சான்றி தழ் வழங்க வேண்டும் என கடந்த 2000-ஆம் ஆண்டு புதுச்சேரி அரசு பிறப்பித்த உத்தரவு, பாலின பாகுபாடு கொண்டது எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. இந்த உத்தரவை கடந்த 2023-ல் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. மேலும், கடந்த 2025 மே மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச், தாய் வழி பூர்வீகத்தின் அடிப்படை யில் சான்றிதழ் வழங்கக் கோரி தீர்ப்பளித்தது. இத்தனை நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகும், அவற்றை மதிக்காமல் புதுச்சேரி அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்துள்ளது. இதையே காரணமாகக் காட்டி, தாய் வழி சான்றிதழ் வழங்குவதை யும் அரசு நிறுத்தி வைத்துள்ளது. மாணவர்களின் கல்வி பாதிப்பு அரசின் இந்த நடவடிக்கையால் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் கல்வி பயில விண்ணப்பிக்க முடியாமல் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்தத் தடையை எதிர்த்து சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசார ணையின் போது, உச்ச நீதிமன்றத்தில் மனு நிலுவையில் உள்ளதை அரசுத் தரப்பு காரணமாகக் காட்டியது. ஆனால், அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், “ஏற்கனவே உயர் நீதிமன்றம், உயர்நீதி மன்ற அமர்வு மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை அமல்படுத்தாமல், நிலுவையில் உள்ள மனுவைக் காரணம் காட்டி தாய் வழி சான்று வழங்க மறுப்பது சரியல்ல” என புதுச்சேரி அரசைக் கடுமையாகக் கண்டித்ததோடு, உடனடியாக பூர்வீக தாய் வழி சான்று வழங்க உத்தரவிட்டுள்ளனர். சிபிஎம் கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராகவும், பாலின பாகுபாட்டை கடை பிடிக்கும் உள்நோக்கத்தோடும் செயல்பட்டு, அம்மாணவர்களின் எதிர்காலத்தை சீரழித்து வரும் புதுச்சேரி அரசின் இத்தகைய போக்கினை சிபிஎம் வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு, நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக பூர்வீக தாய் வழி சாதிச் சான்றிதழ் வழங்கிட புதுச்சேரி அரசு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.