தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ.14,300 கோடிக்கு புதுச்சேரி பட்ஜெட் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்

9 hours before
ரூ.14,300 கோடிக்கு புதுச்சேரி பட்ஜெட் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்

ரூ.14,300 கோடிக்கு புதுச்சேரி பட்ஜெட் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்

புதுச்சேரி, ஆக. 24-புதுச்சேரியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக முக்கி யத்துவம் கொடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் முதல் வர் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் திங்கள்கிழமை காலை (ஆக. 24) துவங்கி யது. நிதிப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்க

சாமி, 2026-27 ஆம் ஆண்டிற் கான வரவு செலவு திட்ட மதிப்பீடாக ரூ.14,300 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதில் ரூ. 12,115 கோடி வருவாய் செலவினங்க ளுக்காகவும், ரூ. 2,185 கோடி மூலதன செல வீனங்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக சிறப்பு

கூறு திட்ட நிதியாக ரூ. 642.38 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மாநிலத்தின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்

படும் என்றும், தொலைத் தொடர்பு பயன்பாட்டு வழித்தடங்கள் மாநாட்டு மையங்கள் சுற்றுலா உள்கட்டமைப்பு பாரம் பரிய கட்ட மைப்புகள் மற்றும் பொது முக்கியத்து

வம் வாய்ந்த பல்வேறு துறைகளில் உள்ள உள்கட்ட மைப்பு திட்டங்களை அடையாளம் கண்டு முன்னுரிமை அடிப்படை யில் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக காலை 9:30 மணிக்கு பேரவை கூட்டம் கூடியவுடன் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் தனது உரையை தமிழில் வாசித்தார். இக்கூட்டத்தொடர் ஆகஸ்ட் 31 வரை நடைபெறுகிறது.

முதல்வர் உள்ளாட்சி வளர்சிப்பாதை திட்டத்தின் கீழ் மக்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த உள்கட்டமைப்பு கள் வலுப்படுத்த, 2 ஆயிரத்து 282 பணிகள் ரூ.ஆயிரத்து 131 கோடியில் செயல்படுத்த ஐந்தாண்டு திட்டம்முதல்முறையாக வகுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் நேரு வேளாண் கல்லுாரியில் பழங்கள், காய்கறிகள் பதப்படுத்த ஒருங்கிணைந்த முன்னோடி மையம் அமைக்கப்படும். 8 ஆயி ரத்து 500 பேருக்கு விவ சாய திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். பயிர்கடன் எளிதாக பெற ஒருங்கிணைந்த கடன் இணையதள உள்கட்ட மைப்பு அமைக்கப்படும்.

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரம் ஆக உயர்த்தி

வழங்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி தனது பட்ஜெட் உரையில் தெரி வித்துள்ளார்.

பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

முதல்வரின் புதுமைப் பெண் திட்டத்தில் 250 இ பைக், 50 இ ஆட்டோ வழங்கப்படும்.

வன்கொடுமையால் இறக்கும் எஸ்சி, எஸ்டி குடும்பத்தை சேர்ந்த வருக்கு அரசு, பொது துறை நிறுவனத்தில்கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும்.

காவிரி நீர் கிடைக்காமல் தவிக்கும் காரைக்கால் விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.ஆயிரத்து 500 வீதம் உழவு நிதிஉதவி வழங்கப்படும். கிராமப்புறங்களில் நடமாடும் நூலகம் அறிமுகப்படுத்தப்படும்.புதுச்சேரி ரேசன் கடைகளில் அரிசி அளவை மாற்றி அமைத்து, கோதுமை மாவு, துவரம்பருப்பு, கேழ்வரகு மாவு,சர்க்கரை, நெய் உட்பட அத்தியாவசிய உணவு பொருட்கள் தொகுப்பாக வழங்கப்படும்.

ரேசன்கடைகளில் துவரம் பருப்பு, உளுந்து, சமையல் எண்ணைய், சர்க்கரை, அத்தியாவசிய பொருட்கள்அடக்கவிலையிலும் விற்கபனை செய்யப்படும். முதல்கட்டமாக 10 இடங்களில் அடக்க விலை கடைகள்அமைக்கப்படும்.

பசுமை பரப்பை அதிகரிக்க 55 எக்டேரில் மாங்குரோவ் காடுகள், 21 எக்டேரில் புதிய காடுகள் உருவாக்கப்படும்.கடலோரத்தில் 2 லட்சம் பனை விதைகள் விதைக்கப் படும். கண் சிகிச்சைக்கு 50 படுக்கை கொண்ட கண்மருத்துவமனை கட்டப்படும்.அரசு, அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் அனைத்து மாணவர்க ளுக்கும் இலவச பஸ் வசதிசெய்யப்படும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.