முந்தய பக்கம்

புதுச்சேரி சட்டப்பேரவை நாளை கூடுகிறது

19 May 2026, 1:22 am
புதுச்சேரி சட்டப்பேரவை நாளை கூடுகிறது
<p><strong>புதுச்சேரி சட்டப்பேரவை நாளை கூடுகிறது</strong></p><p>புதுச்சேரி, மே 18- புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் புதன்கிழமை (மே 20) ல் கூடுகிறது என்று தற்காலிக பேரவை தலைவர் அ.அன்பழகன் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் தற்காலிக பேரவைத்தலை வராக பொறுப்பேற்ற அன்பழகன் திங்கள் கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் 16வது சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதி மொழி ஏற்கும் வகை யில், மே 20ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதல்வர் ரங்கசாமி சட்டப்படி ஒரு தொகுதி யில் ராஜினாமா செய்யவேண்டும். அதை உறுதி செய்யும் விதத்தில் தான் போட்டி யிட்டு வென்ற தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்து கடிதம் தந்துள்ளார். இது எனது பரிசீலனையில் உள்ளது. இதன் மீது உரிய உத்தரவை பிறப்பிப்பேன். சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதி மொழி ஏற்றப்பிறகு முதல்வர் ரங்கசாமியின் பரி சீலனை அடிப்படையில் சட்டப்பேரவை தலைவர் தேர்தல் தேதியானது அறிவிக் கப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, இணையத்தளங்களில் நேரடியாக ஒளிப்பரப் பாகும். மக்கள் கூடும் முக்கிய இடங்களில் அகண்ட திரைகளில் நேரடியாக பார்க்கவும் ஏற்பாடு செய்யப்படுள்ளது என்றார். தற்காலிக பேரவை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அ.அன்பழகன் அதி முகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram