தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்களிப்பு

10 Apr 2026, 5:30 am
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்களிப்பு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்களிப்பு

புதுச்சேரி, ஏப்.9- புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. மாநிலத்தின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் காலையிலேயே தங்களது வாக்குச்சாவடிகளுக்குச் சென்று ஜனநாயகக் கடமையை மாற்றினர்.

துணைநிலை ஆளுநர் ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட லோக்யுவாசித் வரிந்து வரும் துணைநிலை ஆளுநர் க.கைலாஷ்நாதன், இன்று காலை சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்குத் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கை பதிவு செய்தார்.

முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, இந்திரா நகர் தொகுதிக்கு உட்பட்ட திலாசுப்பேட்டை பிள்ளையார் கோயில் வீதியில் வசித்து வருகிறார். அவர் இன்று திலாசுப்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். வழக்கம் போலவே எளிமையைக் கடைப்பிடிக்கும் விதமாக, அவர் தனது வீட்டிலிருந்து யமஹா இருசக்கர வாகனத்தில் சுயமாக ஓட்டி வந்து வாக்களித்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) புதுச்சேரி மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன், இ.சி.ஆர். சாலையில் அமைந்துள்ள உழவர்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அரசியல் தலைவர்களின் வருகையையொட்டித் தொண்டர்களும் பொதுமக்களும் அங்கு திரண்டிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.