தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் சிபிஎம் வேட்பாளர்கள் இறுதி கட்டப்பிரச்சாரம்

6 Apr 2026, 5:37 pm
புதுச்சேரி  சட்டப்பேரவை  தேர்தல் சிபிஎம்  வேட்பாளர்கள்  இறுதி  கட்டப்பிரச்சாரம்
<p><strong>புதுச்சேரி &nbsp;சட்டப்பேரவை &nbsp;தேர்தல் சிபிஎம் &nbsp;வேட்பாளர்கள் &nbsp;இறுதி &nbsp;கட்டப்பிரச்சாரம்</strong></p> <p>புதுச்சேரி,ஏப்.6 புதுச்சேரி சட்டப்பேர வைத் தொகுதியில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் &nbsp;கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் களுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் கட்சி ஊழியர் களும் வெகுஜன அமைப்பி னரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இலாஸ்பேட்டை தொகுதி குமரன் நகரில் சிபிஎம் உழவர்கரைநகர செயலளார் ராம்ஜி தலை மையில் &nbsp;வீதி வீதியாக அரி வாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரம் நடைபெற்றது. &nbsp;கட்சியின் தமிழ்மாநிலக்குழு உறுப் பினர் ஆறுமுகநயினார் கலந்து கொண்டு வேட்பா ளர் ராஜாங்கத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள், மாநிலக்குழு உறுப்பினர் கள் ராமசாமி, சரவணன், உமா மற்றும் சிஐடியு புதுச் சேரி நடைபாதை வியாபாரி கள் உட்பட &nbsp;திரளானோர் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர். மாதர்சங்கத்தினர் &nbsp;இலாஸ்பேட்டை தொகு திக்கு உட்பட்ட குறிஞ்சி நகரில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநில தலைவர் முனியம் மாள் தலைமையில் நிர் வாகிகள் மாரிமுத்து, சத்தியா உட்பட திரளாக பெண்கள் அரிவாள், சுத்தி யல், நட்சத்திரம் சின்னத் திற்கு அப்பகுதி பெண்களி டம் வாக்கு சேகரித்தனர். &nbsp; தேர்தல் நிதி இலாஸ்பேட்டை தொகுதி சிபிஎம் வேட்பாள ரின் தேர்தல் பிரச்சாரத்திற் காக &nbsp;எல்ஐசி அரங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் சிபிஎம் மாநில செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை யில் வேட்பாளர் ராஜாங்கத் திடம் ரு.14 ஆயிரம் நிதி வழங்கினர். திருபுவனையில் பிரச்சாரம் திருபுவனை தொகுதி யில் போட்டியிடும் வேட்பா ளர் தட்சணாமுர்த்திக்கு திரு வாண்டார்கோவில் பகுதி யில் இந்திய மாணவர் சங்க &nbsp;தலைவர் ஸ்டீபன் தலைமை யில் நிர்வாகிகள் &nbsp;திறந்த வாகனத்தில் சென்று அரி வாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரி த்தனர். இதில் சிபிஎம் மூத்த தலைவர் முருகன் உற்சாக மாக கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.