புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் சிபிஎம் செயல்வீரர்கள் கூட்டம்
13 Mar 2026, 4:52 pm
<p><strong>புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் சிபிஎம் செயல்வீரர்கள் கூட்டம் </strong></p>
<p>புதுச்சேரி, மார்ச் 13- சட்டமன்றத் தேர்தலுக் கான மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் முதலியார் பேட்டை தொகுதியில் நடைபெற்றது. 2026 வருகின்ற புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரகமிட்டி சார்பில் முதலியார் பேட்டை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நகர கமிட்டி செயலாளர் ஜோதிபாசு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சி யின் மாநில செயலாளர் ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், சீனிவாசன், கலியமூர்த்தி, சத்தியா, மாநிலக் குழு உறுப்பினர்கள் மதிவாணன், சரவணன், சஞ்சய்சேகரன் உட்பட கமிட்டி உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினார்கள். தீர்மானம் புதுச்சேரியில் ஆளும் மக்கள் விரோத என்.ஆர்.காங்கிரஸ்,பாஜக கூட்டணி ஆட்சியை வீழ்த்து வதற்கு தேர்தல் களப்பணி யாற்றுவதற்கு தொகுதியில் உள்ள 38 வாக்குச்சாவடி மையங்க ளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தின் வாழ்வாதாரங்களை பாது காக்க மக்களுக்கான பிரச்சாரம் தொடர்ந்து மேற்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.</p>
