தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் புதுச்சேரி வி.தொ.ச. மாநாட்டில் வலியுறுத்தல்

5 hours before
விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் புதுச்சேரி வி.தொ.ச. மாநாட்டில் வலியுறுத்தல்

விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் புதுச்சேரி வி.தொ.ச. மாநாட்டில் வலியுறுத்தல்

புதுச்சேரி, நவ.14-அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தின் புதுச்சேரி மாநில 8 வது மாநாடு மதகடிப்பட்டில் கொடி யேற்றத்துடன் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டு கொடியை வரவேற்பு குழு தலைவர் உலகநாதன் ஏற்றி வைத்தார். மாநாட்டிற்கு, இன்னரசு தலைமை தாங்கி னார்.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் ஆ. லாசர் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசியதாவது: எண்ணற்ற விவசாய தொழிலாளர்களின் போராட்டத்தால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை

வாய்ப்பு திட்டம் கொண்டு

வரப்பட்டது. இத்திட்டத்தை சீரழிக்கும் வகையில் ஒன்றிய மோடி அரசு செயல்படுகிறது. எனவே போராடிப் பெற்ற உரிமை களையும், திட்டங்களையும் பாதுகாக்க கிராமப்புற விவ சாயிகளை நாம் அணி திரட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மாநாட்டில் வேலை அறிக்கையை மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வனும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் தட்சிணா மூர்த்தியும் வாசித்தனர். சிஐடியு புதுச்சேரி மாநில செயலாளர் சீனுவாசன், அகில இந்திய விவசாயிகள் சங்க துணைத் தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள். சங்க நிர்வாகிகள் சிவசங்கரி, ஹரிதாஸ்,விநாயகம், சுந்தர்ராஜ், தர்மசிவம் உட்பட திரளான பிரதி நிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.

நிர்வாகிகள் தேர்வு

மாநாட்டில் சங்க த்தின் புதுச்சேரி மாநிலதலைவராக தட்சிணாமூர்த்தி, பொதுச்செயலாள ராக தமிழ்ச்செல்வன், பொருளாளராக இன்னரசு உள்ளிட்ட 21 பேர் கொண்ட மாநில குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வகையில் விபி ஜி ராம் ஜி சட்டத்தை ரத்து செய்துள்ளதை திரும்பப் பெற்று, மீண்டும் மகாத்மா காந்தி பெயரிலேயே திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வீடற்ற விவசாய தொழிலாளர்களுக்கு மனைப்பட்டா மற்றும் வீடு கட்ட மானியம் வழங்க வேண்டும். புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். புதுச்சேரி

விவசாய தொழிலாளர்க ளுக்கு துவங்கப்பட்டுள்ள நலசங்கத்தை நலவாரிய மாக மாற்றவேண்டும். விவ சாயத் தொழிலாளர்களுக்கு தற்போதைய சட்டக்கூலி யான ரூ.347 ஐ குறைக்காமல் வழங்கிட வேண்டும். ஆண்டொன்றுக்கு 200 நாட்கள் வேலையை உயர்த்தி வழங்கிட வேண்டும். நாள் ஒன்றுக்கு சம்பளம் ரூ.700 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.