புதுச்சேரிக்கு ஊரக வேலை திட்டத்தில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கக் கோரிக்கை விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
21 Jul 2026, 11:28 pm
<p><strong>புதுச்சேரிக்கு ஊரக வேலை திட்டத்தில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கக் கோரிக்கை விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>புதுச்சேரி, ஜூலை 21- தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் புதுச்சேரிக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பாகூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராமப்புற விவசாய தொழி லாளர்களுக்கு ஆண்டுக்கு 200 வேலை நாட்களாக நீட்டித்து வழங்க வேண்டும் என்றும், வேலை செய்யும் தொழி லாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.700 ஆக ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது. புதுச்சேரியில் 65 ஆயிரம் பயனாளிகள் வேலை செய்து வரும் நிலையில், 2026-ஆம் ஆண்டிற்கு ஒன்றிய பாஜக அரசு ஒதுக்கியுள்ள ரூ.40 கோடியே 56 லட்சம் தொகையை ரூ.300 கோடியாக உயர்த்தி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், 40 சதவீத நிதியை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்ற கட்டாயத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், வேலைத் தளத்தில் தொழிலாளர்களின் கருவிழி ஸ்கேன் செய்யும் முறையை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பாகூர் வட்டாட்சியர் (தாசில்தார்) அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தின் கொம்யூன் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கி னார். சங்கத்தின் புதுச்சேரி மாநிலப் பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார். இதில் மாநிலப் பொருளாளர் அரிதாஸ், நிர்வாகிகள் செல்வராசு, பானு மதி, வளர்மதி, சாம்பசிவம், சக்திவேலு, தனுசு, பூங்காவனம், சிந்து உள்ளிட்ட திரளான விவசாயத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.</p>
