தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுச்சேரி 2026: மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் அதிகார ஆக்கிரமிப்பு மக்கள் மன்றத்தில் ஒரு வாழ்வா-சாவா போராட்டம்!

8 Apr 2026, 5:30 am
புதுச்சேரி 2026: மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் அதிகார ஆக்கிரமிப்பு மக்கள் மன்றத்தில் ஒரு வாழ்வா-சாவா போராட்டம்!

புதுச்சேரி 2026: மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் அதிகார ஆக்கிரமிப்பு மக்கள் மன்றத்தில் ஒரு வாழ்வா-சாவா போராட்டம்!

இந்தியாவின் மிகச்சிறிய நிலப்பரப்பான புதுச்சேரி யூனியன் பிரதேசம், வரும் ஏப்ரல் 9 அன்று தனது 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலை எதிர்கொள்கிறது. இத்தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான களம் அல்ல; மாறாக, புதுச்சேரியின் தன்னுரிமையும் ஜனநாயக மாண்புகளும் ஒன்றிய பாஜக அரசின் அதிகார ஆக்கிரமிப்பால் சிதைக்கப்படுவதைத் தடுப்பதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறப்போராக உருவெடுத்துள்ளது.

கடந்த ஐந்தாண்டு கால என்ஆர்சி (என்ஆர் காங்கிரஸ் - பாஜக) ஆட்சியில் புதுச்சேரியின் நிர்வாகம் முற்றிலுமாக ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு பொம்மை அரசாங்கமாக மாற்றப்பட்டதும் வாக்காளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திட்டமிட்ட அதிகாரப் பறிப்பு மற்றும் நேரடித் தலையீடு புதுச்சேரியில் கடந்த பத்தாண்டுகளில் பாஜக முன்னெடுத்த அரசியல் என்பது தேர்தல்களில் வெற்றி பெறுவதல்ல, மாறாக குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே ஆகும். 2016இல் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பாஜக, 1963ஆம் ஆண்டு யூனியன் பிரதேசங்கள் சட்டத்தைப் பயன்படுத்தி மூன்று நியமன எம்எல்ஏ-க்களைத் தன்னிச்சையாக நியமித்தது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.